இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 18, 2011

அது ஒரு கனாக்காலம்!

பண்பான மனைவி, அன்பான மனைவி, குடும்ப மானத்தை காக்கின்ற மனைவி என்பதெல்லாம் இனி கணவன்களுக்கு ஒரு கனாக்காலம் போல் மாறிவிடும் போலிருக்கிறது!

ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமமே என்று இதுவரை புரிந்துகொள்ளாத மரமண்டைகள் இனியாவது புரிந்துகொள்ளட்டும்.

கணவரை ஏமாற்றி 2வது திருமணம் மோசடி மனைவி உட்பட இருவர் கைது ஜூலை 18,2011 தினமலர்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே, கணவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவி மற்றும் அவரது சகோதரியையும், போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சி, கயப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 30. இவர், சென்னை, மாதவரம் தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சேமக்கோட்டை மண்ணாங்கட்டி மகள் மோகனாவிற்கும், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் மோகனா, கயப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி, புதுச்சேரி கல்லூரியில் பி.எட்., படித்தார். இரண்டு மாதத்திற்குப் பிறகு, தன் தாய் வீட்டிலிருந்து படிப்பதாகக் கூறிச் சென்றார். கடந்த மே மாதம் கஜேந்திரன், தன் மனைவி மோகனாவை பார்க்கச் சென்றார். அப்போது, மோகனாவின் தாயார் அஞ்சம்மாள், 23, ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் கணவர் மண்ணாங்கட்டி வீட்டிற்குச் சென்றிருப்பதாகக் கூறி அனுப்பி விட்டார்.

இந்நிலையில், சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும், மோகனாவிற்கும் திருமணம் நடந்து, கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையறிந்த கஜேந்திரன், கடலூர் எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார். அதில், "திருமணத்திற்கு முன்பே தன்னை ஏமாற்றி ஊட்டி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றது மட்டுமல்லாமல் பணம், நகை கொடுத்துள்ளேன். மேலும், படிப்பு செலவையும் செய்துள்ளேன். ஆனால், என் மனைவி மோகனா, என்னை ஏமாற்றி விட்டு ராமச்சந்திரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து கேட்டதற்கு, அவரது தாயார் அஞ்சம்மாள், அக்கா வனஜா, அவரது கணவர் அரசன் ஆகியோர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்' என தெரிவித்துள்ளார். எஸ்.பி., பகலவன் உத்தரவின்படி, பண்ருட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி புகாரின்படி, மோகனா, வனஜா, அரசன், அஞ்சம்மாள், மோகனாவின் தம்பி ஞானகுரு ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து மோகனா, 23, வனஜா, 31, ஆகியோரை கைது செய்தனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.