இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, July 30, 2011

ஒவ்வொரு கொலையிலும் ஒரு பெண்ணா?

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படும் வெற்றி அல்லது தோல்விக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் கண்டிப்பாக ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் அதுவும் மனைவியாக இருக்கிறாள் என்று உறுதியாக சொல்லும் அளவிற்கு தினசரி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

படித்த நாகரீகமான பெண்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்களும், காவல்+நீதித்துறைகளும் இலவசமாக உதவிசெய்கின்றன. போதிய படிப்பறிவும் அனுபவும் இல்லாத பெண்களுக்கு கூலிப்படைகள் உதவி செய்கின்றன.

வழிமுறை வேறாக இருந்தாலும் மனைவியரின் நோக்கம் ஒன்றுதான். அதுபோலவே உதவிசெய்பவர்களின் உருவங்கள் வேறாக இருந்தாலும் கடைசியில் மனைவி எதிர்பார்த்தது போலவே கணவனின் வாழ்வை சிதைத்துவிடுவார்கள்.


ஆட்டோ டிரைவர் கடத்தல்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல சதித்திட்டம் மனைவி உள்பட 3 பேர் கைது



ராசிபுரம், ஜூலை.29-2011 மாலைமலர்

ராசிபுரம் அருகே ஆட்டோ டிரைவரை கடத்தி கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோவை திருடிச்சென்ற சம்பவத்தில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய தகவல்கள் அம்பலம் ஆனது. இதையட்டி ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை வெண்ணந்தூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- ராசிபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45) இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். தினந்தோறும் ஆண்டகளூர்கேட்டில் ஆட்டோவை நிறுத்திவைத்து வாடகைக்கு அவரே ஓட்டி வந்தார்.

இவரது மனைவி சுமதி என்கிற காந்திமதி (43). இவர்களுக்கு பூவரசன் (15) என்ற மகனும், சொர்ணமுகி (14) என்ற மகளும் உள்ளனர். சண்முகசுந்தரத்தின் மனைவி சுமதி வெண்ணந்தூர் அருகே உள்ள சவுதாபுரம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 13-6-11-ந் தேதி இரவு 11 மணியளவில் ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரம் ஆண்டகளுர்கேட்டில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்திடம் வையப்பமலை அருகேயுள்ள ஆத்துமேடு என்ற இடத்திற்கு போக வேண்டும் என்று கூறி ஆட்டோவில் சென்றுள்ளனர்.

ஆட்டோவை சண்முகசுந்தரம் ஆத்துமேடு பக்கமுள்ள தொட்டிப்பட்டி சாலையில் ஓட்டிச் சென்றபோது திடீரென்று ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சண்முகசுந்தரத்தை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சண்முகசுந்தரத்தை தாக்கிவிட்டு ஆட்டோவை அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பலத்தகாயம் அடைந்த சண்முகசுந்தரத்தை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கத்தியால் குத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்களையும், திருடப்பட்ட ஆட்டோவையும் தேடி வந்தனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட ஆட்டோ சங்ககிரி பக்கமுள்ள எடப்பாடி ரோட்டில் அனாதையாக கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள்.

சண்முகசுந்தரத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துச் சென்ற மர்ம நபர்களை தொடர்ந்து போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன் தலைமையில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பாலகிருஷ்ணன், சப்&இன்ஸ்பெக்டர் அன்பழகன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, வேலாயுதம், போலீஸ்காரர்கள் பாலமுருகன், கணேசன், கனகராஜ், பெண் போலீஸ் உமா ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

அப்போது சேலம்-நாமக்கல் மெயின்ரோட்டில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த வெள்ளித்திருப்பூரைச் சேர்ந்த செந்தில் (30) சங்கர் (29) ஆகிய 2 பேர்களை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட செந்தில் என்பவனின் தங்கை பிரியாவின் வீடு சவுதாபுரத்தில் இருப்பதாகவும் தங்கையை பார்க்க வந்தபோது அங்கு மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வந்த ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்தின் மனைவி சுமதிக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இதைக் கருத்திற்கொண்டு சுமதியின் கணவர் சண்முகசுந்தரத்தை கொலைசெய்ய திட்டம் தீட்டி இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 13-6-11-ந் தேதி செந்திலும் அவனது மாமன் மகன் சங்கர் என்பவனும் ஆண்டகளுர்கேட்டிற்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து சுமதிக்கு போன் செய்து உன் கணவரை (சண்முகசுந்தரத்தை) முடிக்க வந்துள்ளோம் என்று கூறிவிட்டு அங்கு இருந்த ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்திடம் ஆட்டோவை வாடகைக்கு பேசி எடுத்துச் சென்றனர். பிறகு வையப்பமலை பக்கமுள்ள ஆத்துமேடு தொட்டிபட்டி சாலையில் சென்றபோது ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்தை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றதை போலீசாரிடம் கைது செய்யப்பட்ட செந்தில் மற்றும் சங்கர் ஆகியோர் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமதியிடம் விசாரணை செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது கணவர் சண்முகசுந்தரத்தை கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதன்பேரில் ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அவரது மனைவி சுமதி, மற்றும் கள்ளக்காதலன் செந்தில், அவரது உறவினர் சங்கர் ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில் லாரி டிரைவர் ஆவார். சங்கர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய மனைவியே திட்டம் தீட்டிய இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.