இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, July 10, 2011

டெல்லியில் பெண்கள் 50% அடைந்துவிட்டனரா?

டெல்லியில் வாழும் பெண்கள் கொலைக் குற்றம் புரிவதில் 50% பங்கினை அடைந்துவிட்டனர் என்று செய்தித்தாள் புள்ளிவிபரம் கூறுகிறது. நீதிமன்றங்களில் தீர்ப்பு தவறாகச் சொல்லிவிட்டார்களா? அல்லது உண்மையாகவே பெண்கள் உரிமை பெற்றுவிட்டார்களா? ஒரே குழப்பமாக இருக்கிறதே!

கொலைக் குற்றவாளிகளில் பாதி பேர் பெண்கள்: திகார் சிறை அதிகாரி தகவல்
ஜூலை 11,2011 தினமலர்

புதுடில்லி : ""திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலைக் குற்றவாளிகளில், பாதி பேர் பெண்கள்,'' என, சிறை அதிகாரி கூறியுள்ளார். கடந்த ஆண்டில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக, 2,751 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 25 சதவீதம் பேர், தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகள். 75 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். தண்டனை உறுதியான குற்றவாளிகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்களில் பாதி பேர் வரை பெண் கைதிகள். அதாவது, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகளில், 46.15 சதவீதம் பேர் பெண் கைதிகள்; ஆண்கள் 33.47 சதவீதம் மட்டுமே.

கொலை முயற்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 6.73 சதவீதத்தினர் பெண்கள்; 5.93 சதவீதம் பேர் ஆண்கள். ஆள்கடத்தல் வழக்குகளில், 10.58 சதவீத பெண் கைதிகளுக்கும், 3.66 சதவீத ஆண்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளில், 8.66 சதவீத பெண்கள் தண்டனை பெற்றுள்ளனர். ஆண்கள் எண்ணிக்கை 2.64 சதவீதம் மட்டுமே. கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக, 7.69 சதவீத பெண்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு: வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஆனால் பழி என்னவோ ஆண்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு எதிரி மற்றொரு பெண்தான். ஆனால் சட்டங்கள் மட்டும் ஆண்களைத்தான் தண்டிக்கிறது! பெண்கள் திருந்தாதவரை எந்தக் குற்றமும் ஒழியாது. இவர்களைத் திருத்துவதற்கு பதிலாக ஆண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தி சுகம் காணுவதை நிறுத்தாதவரை நாடு நல்லநிலையை அடையாது)

பெண் கைதிகளில் பெரும்பாலானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். குறிப்பாக, 6ம் எண் சிறையில் பெண் கைதிகள் நிரம்பியுள்ளனர். இங்கு, வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 406 பேர் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகள் 106 பேரும் உள்ளனர்.

திகார் சிறையின் செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா இதுகுறித்து கூறுகையில், ""கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை ஆய்வு செய்தோம். அதில், பெண் குற்றவாளிகள் பெருமளவில் இருப்பது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்,'' என்றார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.