சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 08, 2011

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்

மனைவியின் பேச்சைக் கணவன் கேட்கவில்லையென்றால் உடனடியாக பொய் வரதட்சணை வழக்கு என்ற ஆயுதத்தை கைபடாமல் பயன்படுத்தி காவல் நீதித்துறைகளை இலவச கூலிப்படையாக்கி கணவனை தண்டித்துவிடுவார்கள் - இது படித்த நகரத்துப் பெண்கள் செய்யும் நாகரீகமான செயல். இந்த விஷயம் கிராமத்துப்பக்கம் சென்றால் எப்படி நடக்கும் என்பதைத்தான் பின்வரும் செய்தி காட்டுகிறது.

மனைவியின் பேச்சைக் கேட்காத கணவர் கழுத்தறுத்து கொலை

ஜூலை 09,2011 தினமலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் கணவரின் தாய் பெயரில் உள்ள சொத்து கிடைக்காத ஆத்திரத்தில், கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (40). இவரது மனைவி சரஸ்வதி (38). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஜூன் 8ம் தேதி வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரவீந்திரன் பிணமாக கிடந்தார். தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி சரஸ்வதி போலீசில் புகார் செய்தார்.

இதனிடையே , ஸ்ரீவி.,டவுன் இன்ஸ்பெக்டர் ராமசாமி, ஞானசவுந்தரி எஸ்.ஐ., கொண்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் ,"சொத்துக்காக மனைவியே கணவரை கொலை செய்தது,' தெரிய வந்தது. மேலும் விசாரணையில் , ரவீந்திரன் குடிப்பழக்கத்தால் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சரஸ்வதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் கணவரும் கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த ரவீந்திரன் , கடந்த ஜூன் 7ம் தேதி தனது உடலை பிளேடால் கீறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட,கணவரிடம் கோபித்து கொண்டு அன்று இரவு அருகில் உள்ள உறவினர் வீட்டில் போய் படுத்து
கொண்டார். அதிகாலையில் வீட்டிற்கு வந்த சரஸ்வதி, குடி போதையில் கிடந்த கணவர் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ஸ்ரீவி.,கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ராஜகுமார் உத்தரவிட்டார்.

1 comment:

Niroo said...

காலங்காத்தால கொலையா?

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.