சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 22, 2011

பெண் விடுதலை - ஒரு விளக்கப் படம்

இந்தியப் பெண்களின் உரிமைக்காக இந்தியாவில் பெண்கள் எப்படியெல்லாம் போராட்டம் செய்யவேண்டும் என்று யாரோ எப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று படத்தில் பாருங்கள்.


சேலம் பெரியார் சிலை அருகில், பெண்கள் விடுதலை முன்னணியினர், நித்தியானந்தா, ரஞ்சிதா உருவ படங்களை செருப்பு, துடைப்பத்தால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். (தினமலர் செய்திப்படம் 22.7.2011)

வீட்டில் குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை, சரியான மருத்துவ வசதி இல்லை, தான் பெற்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கு சரியான பள்ளிக்கூட வசதி இல்லை, அரசாங்க அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது, ரேஷன் கடைக்குப் போனால் புழுத்துப்போன அரிசிதான் பல காலமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது....... இவை எல்லாவற்றையும் விட எங்கோ ஒரு சொகுசுக்கார பணக்கார ஆசாமி எதையோ செய்ததற்கு இது ஏதோ நாட்டின் தலையாய பிரச்சனை போல போராட்டம் செய்யவைத்திருக்கிறார்களே?

இதுபோன்ற அற்பத்தனமான போராட்டங்களால் யாருடைய வாழ்வு மேம்படப்போகிறது? நம்ம வீட்டில் அடுப்பெரிய வெளிநாடுகளில் இருப்பது போல குழாயில் 24 மணிநேரமும் எரிவாயு கிடைக்கப்போகிறதா? அல்லது 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கப்போகிறதா? அல்லது தடையில்லா மின்சாரம் ஆண்டு முழுதும் கிடைக்கப்போகிறதா?

இப்படித்தான் பெண்கள் நலனைக் காக்கிறோம் என்ற பெயரில் பல திட்டங்களும், சட்டங்களும் இந்தியாவில் உலவிக்கொண்டிருக்கிறது. கடைசியில் ஏமாற்றப்படுவது பெண்கள்தான். இதை என்று இந்தியப் பெண்கள் உணரப்போகிறார்களோ?No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.