இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 18, 2011

இந்தியப் பெண்களுக்கு கொடுமை செய்வது யார்?

பெண்கள் நலனைக் காப்பதற்காக இந்தியாவில் மகளிர் நல அமைச்சகம் என்று ஒரு தனி அமைச்சரகமும் அதற்கு ஒரு மத்திய அமைச்சரும் இருக்கிறார். இது போதாதென்று தேசிய மகளிர் நல வாரியம் என்று இந்தியநாடு முழுவதற்குமாக ஒரு வாரியமும், இது போதாதென்று ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மகளிர் வாரியம் என்றும் இதுவும் போதாதென்று பெண்களின் நலனை மட்டுமே கவனிப்பதற்காக அரசாங்க நிதியுதவி பெறும் சிறு சிறு தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன.

இவையெல்லாம் இருந்தாலும் இன்னும் இந்தியப் பெண்கள் அடிப்படை வசதியான குடிநீருக்கு இன்றும் அலையவேண்டிய துர்பாக்கியமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்று படம் போட்டுக் காட்டியிருக்கிறது தினமலர் (19/7/2011). இதைப்படிக்கின்ற உங்கள் வீட்டிலும் பெண்கள் இப்படித்தான் தினந்தோறும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. அதற்குப் பதிலாக பெண்களுக்கு “பப்பு” களில் தண்ணியடிக்க உரிமை வேண்டும், கணவன் அடித்தால் திருப்பி அடிக்க உரிமை வேண்டும், பிடிக்காத கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பொய் வழக்குப் போடுவதற்கு வசதியாக அடுக்காக பல சட்டங்கள் வேண்டும், கள்ள உறவினை தொடர்வதற்கு கணவனை மிரட்டி பணம் பறிக்க வசதியாக குடும்ப வன்முறை சட்டம் வேண்டும் என்றுதான் பல பெண்ணுரிமை அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன.

எல்லாம் சரி. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்த நாம் நிலத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்பதை மறந்துவிட்டோமா?




இந்த இந்தியக் குழந்தைகளுக்கு இன்று வரை மின்சாரம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன செய்திருக்கிறார்கள் இதுவரை?

August 29, 2007 Rediff News

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury


கோவை, சுங்கம் கல்லுக்குழி பகுதியில் மின்சாரம்வேண்டி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்த மழலைகள்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.