இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 20, 2011

இந்திய சாக்கடையில் வாழும் அரசியல்வாதிகள்

மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் அடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல் விஷ ஜந்துக்களுக்கு இந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் வாங்கிக் கொடுப்பதற்கு எவ்வளவு பணம் செலவாகிவிடும்?

தேவை கையுறை...! புதுச்சேரியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களைச் சுத்தம் செய்பவர்கள் வாய்காலில்தேங்கி கிடக்கும் கழிவுகளை வெறும் கைகளால் அள்ளி போடுவதால் நோய் கிருமிகள் தாக்கும் அபாயத்திற்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு கையுறைகள் கொடுக்கப்படுமா? இடம்:முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே. (தினமலர் செய்திப்படம் 21.7.2011)

மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல திருமணம் செய்யாமல் கூடி வாழும் முறை, “Women Empowerment” என்ற பெயரில் பொய் வழக்குப்போட்டு குடும்பங்களை நாசம் செய்துகொள்ள புதுப்புது சட்டங்கள், ஆணுக்குச் சமமாக பெண்களும் மது அருந்த சிறப்புச் சுதந்திரப்போராட்டம் போன்றவைகளை மட்டும் மேல்நாடுகளில் இருந்து “காப்பி” அடித்து இறக்குமதி செய்யும் தலைவர்கள் அந்த மேலை நாடுகளில் இதுபோன்ற தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்துவதில்லை, அப்படியே வேலை செய்தாலும் தகுந்த பாதுகாப்பு செய்து தருகிறார்கள் என்பது போன்ற நல்ல விஷயங்களை மட்டும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய மறுப்பது ஏன்?


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.