ஜூலை 05,2011 தினமலர்
திண்டுக்கல்:திண்டுக்கல், போக்குவரத்து மிக்க பகுதியில் போதையில் மிதந்த ஏட்டு, அரை போதையில் இருந்த எஸ்.ஐ., யை, விரட்டி, விரட்டி தாக்கினார். அவரை கட்டுப்படுத்த முடியாத போலீசார், கைதி அறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சுகுமாறன், 34. நேற்று மாலை 4 மணிக்கு, போதையில், மகளிர் ஸ்டேஷன் அருகே ரோட்டில் மயங்கி கிடந்தார். தனிப்பிரிவு ஏட்டு ஜோசப், அவரை தூக்க முயன்றார். முடியாததால், அரை போதையில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., உலகநாதன், 47, உதவிக்கு வந்தார்.
மயங்கிய ஏட்டுக்கு, கோபம் தலைக்கேறியது. எஸ்.ஐ., முகத்தில் ஒரு குத்து விட்டார். இதை தனிப்பிரிவு ஏட்டால், தடுக்க முடியவில்லை.தொடர்ந்து, "கும்மாங்குத்து' காட்சிகள் அரங்கேறின. எஸ்.ஐ., யை விரட்டி தாக்கினார். இதை பார்த்த பள்ளி மாணவர்கள், மக்கள் அலறி ஓடினர். உயிருக்கு பயந்த எஸ்.ஐ., வடக்கு ஸ்டேஷனுக்குள் ஓட்டம் பிடித்தார். அப்போதும் விடாத ஏட்டு, கெட்ட வார்த்தை, "அர்ச்சனை'களோடு, துரத்தி தாக்கினார். சக போலீசார், அவருடன் மல்லுக்கட்டி, கைதிகள் அறைக்குள் அடைத்தனர். அவரது, "அர்ச்சனை' அடங்காமல், தொடர்ந்து கூச்சலிட்டார். இதனால் குற்றப்பிரிவு ஸ்டேஷனை பூட்டி, போலீசார் வெளியே நின்றனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரணை நடத்தினார்."ஏட்டு, குடும்ப பிரச்னையால், தொடர் போதையில் தகராறு செய்வதும், சிறப்பு எஸ்.ஐ., உலகநாதன் போதையில் மிதப்பதும் வழக்கம்' என, சக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment