சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, June 24, 2011

பெண்ணுக்கு “செக்ஸ் டார்ச்சர்” கொடுக்க குடும்பப் பெண்கள் உதவுகிறார்களா?

அருப்புக்கோட்டை: மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை சேர்ந்தவர் ராதா (27) இவருக்கும் ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த காய்கறி கமிஷன் ஏஜென்ட் வெள்ளைச்சாமி (35) க்கும் கடந்த 2009 ல் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டி, "ஆஸ்பத்திரி செலவிற்காக 5 லட்சம் ரூபாய், பைக் வாங்கி வரும்படி கேட்டு '' மனைவியை வெள்ளைச்சாமி கொடுமைபடுத்தி உள்ளார். இதனால் ராதா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.
மோட்டார் பைக்கிற்கும் குழந்தை பிறப்பிற்கும் ஏதாவது மருத்துவ ரீதியான தொடர்பு இருக்கிறதா? - அந்த வரதட்சணை தெய்வத்திற்குத்தான் தெரியும்!

இதனிடையே ,"தன்னை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாகவும், மாமனார் பாக்கியம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும், இதற்கு மாமியார் முத்துலட்சுமி, நாத்தனார் கோகிலா, மைத்துனர் மனைவி உமா ஆகியோர் உடந்தையாக இருந்ததாக ,''கூறி அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்படி போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நல்லதொரு குடும்பம் இந்தியப் பல்கலைக் கழகம். மாமனார் தனது மருமகளை செக்ஸ் “டார்ச்சர்” செய்ய மாமியார், நாத்தனார், மற்றும் மைத்துனர் மனைவி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக புகார் செய்யப்பட்டு அதை கடமை தவறா கண்ணியமான காவல்துறையும் வழக்காகப் பதிவு செய்திருக்கிறார்கள்!

ஒரு ஆண் (மாமனார்) தவறு செய்ய அவரது மனைவியும் (மாமியார்), போதாக்குறைக்கு அவரது மகளும் (நாத்தனார்) மற்றும் மற்றொரு மருமகளும் (மைத்துனரின் மனைவி) உதவி செய்திருக்கிறார்களா? என்ன கொடுமை இந்த நாட்டில்!


ஒரு பெண்ணை “ வரதட்சணைக் கொடுமையோடு சேர்த்து செக்ஸ் டார்ச்சர்” செய்யவும் குடும்பத்திலுள்ள மூன்று பெண்களே உதவியிருக்கிறார்களா?

இதற்குப் பெயர்தான் இந்தியப் பெண்கள் பாதுகாப்பு சட்டம்!
செய்தித்தாள் கூட இந்த செய்திக்கு எப்படி மசாலா தடவி தலைப்பு கொடுத்திருக்கிறது பாருங்கள். இதுதான் இந்தியா. காசிற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். வாழ்க பாரதம்!


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.