இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 22, 2011

யாரைத்தான் நம்புவதோ?

முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி மீது சொத்து குவிப்புத் தொடர்பாக விசாரணை ஆரம்பமாகிறது. அப்படியென்றால் அவர் பதவிக்காலத்தில் அவர் கூறிய பல தீர்ப்புகளின் நிலை?

மாஜி நீதிபதி மீது சொத்துகுவிப்பு புகார்
மாஜி நீதிபதி சொத்து குவிப்பு: விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
தினமலர், ஜூன் 23,2011

புதுடில்லி: வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது விசாரணை நடத்த வருவாய்த்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன், மனித உரிமை கமிஷன் தலைவராக உள்ளார். இவர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்‌த்துள்ளதாகவும், இவை உறவினர்கள் ‌பெயரில் பினாமியாக உள்ளதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. இத்தகைய மனுக்கள் அனைத்தும் மத்திய வருவாய்த்துறை செயலருக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் , விசாரணைப்பிரிவின் வாயிலாக, மாஜி நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இது தொடர்பாக ஜனாதிபதியிடம் புகார் அனுப்பி வைக்கப்பட்டு, தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தப்படும்.இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஏற்கனவே நான் எனது சொத்து விவரங்களை வெளியிட்டுவிட்டேன். ஆகையால் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.