சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, June 23, 2011

பிரியாத வரம் வேண்டும்

கள்ளக்காமமும் பொய் வரதட்சணை வழக்குகளும் இணைபிரியாத ஜோடிகள். இந்தியாவில் திருமணம் செய்யும் கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்பட்டாலும் ஏற்படும் இந்த கள்ளக்காமமும், பொய் வரதட்சணை வழக்குகளும் ஒன்றைவிட்டு ஒன்று என்றுமே பிரியாது. அதுபோலவே இந்த பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளை காவல்-நீதி என்ற இரண்டு இணைபிரியா ஜோடிகள் கடைசிவரை அலையவைத்து உயிரை வாங்காமல் விடாது.

கள்ளக்காமம் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக பொய் வரதட்சணை வழக்கு இருக்கும். இவையிரண்டும் இருக்கும் இடத்தில் காவல்துறை கண்டிப்பாக தன் கடமையைச் செய்யும்!

ஜூன் 24,2011 தினமலர்

விழுப்புரம் : கள்ளக்காதலன் மூலம், கணவரை கொலை செய்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். மகளின் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த, சப்- இன்ஸ்பெக்டரும் சிக்கியுள்ளார். விழுப்புரம் நாராயணன் நகர் எம்.ஜி.ஆர்., தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன், 29. அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி, 27. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 22ம் தேதி அதிகாலை தீனதயாளன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதிகாலை 4 மணிக்கு, வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கணவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, தன்னையும் கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான தனிப்படை போலீசார், லட்சுமியின் மொபைல் எண்ணை வைத்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை செய்யப்பட்டு இறந்த தீனதயாளன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தனது உறவினரான சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மகள் லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விழுப்புரம் சிஸ் நகரில் வசித்து வந்த தீனதயாளன், கடந்த 6 மாதத்திற்கு முன் எம்.ஜி.ஆர்., நகரில் வாடகை வீட்டில் குடியேறினார்.

லட்சுமியின் தந்தை சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் விருத்தாசலத்தில் பணியாற்றியபோது, அங்கு போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்த முல்லைத்தோட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன், 33, அடிக்கடி நாகராஜ் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது தந்தை வீட்டில் இருந்த லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. அதன் பிறகு விழுப்புரத்தில் உள்ள லட்சுமி வீட்டிற்கு வந்து சென்றார்.

சந்தேகமடைந்த தீனதயாளன், மனைவி லட்சுமியை கண்டித்தார். விரக்தியடைந்த லட்சுமி, கணவர் சந்தேகத்தில் டார்ச்சர் செய்வதாக தந்தை நாகராஜிடம் கூறினார். இதனை தட்டிக்கேட்டதில் மாமனார், மருமகனிடையே விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து கணவர் டார்ச்சர் செய்வதாக லட்சுமி கூறியதால், அவரது குடும்ப நண்பரான முத்தமிழ்ச்செல்வனிடம் தனது மருமகனை மிரட்ட வேண்டுமென, நாகராஜ் தெரிவித்தார்.

“டார்ச்சர்” - இந்திய சட்ட (IPC) விளக்கம்: கள்ளக்காமத்தில் ஈடுபடும் மனைவியை கணவன் தட்டிக்கேட்டால் அதற்குப் பெயர் “டார்ச்சர்” (Cruelty).

மேலுள்ள செய்தியில் “டார்ச்சர்” செய்த கணவனை மனைவி & Co. போட்டுத்தள்ளிவிட்டார்கள். ஆனால் பெரும்பாலான நவநாகரீக மங்கைகள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்திய சிறப்புச் சட்டங்களான வரதட்சணை சட்டங்களை பக்குவமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தன்னுடைய கணவன் வரதட்சணை அல்லாத பிற விஷயத்திற்காக (உதாரணத்திற்கு கள்ளக்காமத்தைப் பற்றி கணவன் கேட்பது) “டார்ச்சர்” செய்வதாக மனைவி போலிஸில் புகார் கூறினாலும் போதும் எந்தவித ஆதாரமும் இன்றி, எந்தவித காரணமும் இன்றி உடனடியாக காவல்துறை தனது கடமையைச் செய்து IPC498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணவனை அவனது குடும்பத்தோடு சேர்த்து கைது செய்துவிடுவார்கள்.

இதுபோன்ற கள்ளக்காமம் மற்றும் பிற இழிசெயல்களில் ஈடுபடும் மனைவிகளின் நற்பணிகளுக்கு உதவுவதுதான் இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள். இதுபோன்ற மனைவியர்தான் இந்த சட்டங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

The ingredients of Section 498-A are as follows:

“ 498A: Husband or relative of husband of a woman subjecting her to cruelty- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation – For the purpose of this section ’cruelty’ means –

(a) any wilful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health (whether mental or physical) of the woman;

or

(b) harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her to meet such demand.”

ஏலச்சீட்டு நடத்தி வந்த முத்தமிழ்ச்செல்வன், சீட்டு பணம் வாங்க கடந்த ஒரு மாதத்திற்கு முன் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜை பார்க்க எடைக்கல் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது மருமகனை கண்டிக்க வேண்டுமென கூறிய விஷயத்தை நாகராஜ் நினைவுபடுத்தினார்.

கள்ளத்தொடர்பில் இருந்த லட்சுமியும் நேரடியாக முத்தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டு, டார்ச்சர் செய்யும் கணவனை தீர்த்துக்கட்ட வேண்டுமென வற்புறுத்தி வந்தார். இதற்கான திட்டம் வகுத்தபடி அதனை நிறைவேற்ற முத்தமிழ்ச்செல்வன், அவரது நண்பர் மோகனுடன், 22, சேர்ந்து கடந்த 21ம் தேதி இரவு விழுப்புரம் வந்தனர்.

புதிய மொபைல் போன் மூலம் லட்சுமி தகவல் கொடுத்தார். தீனதயாளன் தூங்கியபிறகு தீர்த்துக்கட்ட திட்டமிட்டு வந்த இவர்கள் இருவரும் கல்யாண் தியேட்டரில் படம் பார்த்தனர். "சீக்கிரம் வந்து தீர்த்துக்கட்டுங்கள்' என, அடிக்கடி மொபைல் போன் மூலம் லட்சுமி தகவல் கொடுத்தார்.

அதிகாலை 4.30 மணிக்கு, தீனதயாளன் வீட்டின் பின்புற சுவர் வழியாக இருவரும் ஏறி வந்தனர். லட்சுமி தயாராக கதவைத் திறந்து வைத்திருந்ததால், உள்ளே வந்த இவர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த தீனதயாளனை இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்தனர். தீனதயாளன் அலறல் சத்தம் கேட்டு, அவரது மகள் ரேணுகாதேவி எழுந்தபோது பக்கத்தில் இருந்த லட்சுமி அவளை தட்டி படுக்க வைத்தார்.

தீனதயாளனை கொலை செய்த இருவரும் சந்தேகம் வராமல் இருக்க லட்சுமியையும் கட்டிப் போட்டுவிட்டு, அவரது தாலிச்செயின், நகைகளையும் வாங்கிக்கொண்டு பின் பக்க வழியாக தப்பிச் சென்றனர். போலீஸ் மோப்ப நாயை திசைத் திருப்ப மிளகாய் பொடியை தூவுவதாக நினைத்து மஞ்சள் பொடியை தூவிவிட்டு, கொள்ளையர்கள் கணவரை கொலை செய்துவிட்டு, நகைகளை திருடிச் சென்றதாக லட்சுமி நாடகம் ஆடினார்.

முத்தமிழ்ச்செல்வன், மோகன், லட்சுமி மற்றும் உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோரை, இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.ஐ., தலைமறைவு டி.எஸ்.பி., பேட்டி : விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., மாதவன் நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் பானிபூரி கடை உரிமையாளர் தீனதயாளன் கொலை வழக்கில், தாலுகா இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தீனதயாளனின் மனைவி லட்சுமி, அவரது தந்தை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கள்ளக்காதலன் முத்தமிழ்ச்செல்வன், அவரது கூட்டாளி மோகன் ஆகியோர் கடந்த 25 நாட்களுக்கு முன், நாகராஜ் வீட்டில் சதித் திட்டம் தீட்டினர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் எடைக்கல் போலீஸ் ஸ்டேஷனிலும் சதித் திட்டம் குறித்து பேசியுள்ளனர் (காவல்நிலையம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது!). அதன்படி கடந்த 21ம் தேதி தீனதயாளனை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு கொள்ளை நாடகம் ஆடியுள்ளனர். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார் லட்சுமி, முத்தமிழ்ச்செல்வன், மோகனை கைது செய்துள்ளனர். கொள்ளை போனதாகக் கூறப்பட்ட தங்க நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சதித் திட்டம் தீட்டி தலைமறைவாகியுள்ள சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜை, தனிப்படை தேடி வருகிறது. இவ்வாறு டி.எஸ்.பி., மாதவன் கூறினார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.