இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, June 12, 2011

காவலா காவலா

சமீபத்தில் அமெரிக்க நாட்டில் இந்திய தூதரக அதிகாரியின் மகளை ஒரு வழக்கிற்காக அமெரிக்க போலிஸ் கைது செய்து பிறகு விட்டுவிட்டார்கள். அதற்காக இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்தப் பெண்ணும் அமெரிக்க அரசாங்கத்திடம் பல கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார். அது பற்றிய செய்தியை இங்கே காணலாம் -> அமெரிக்க போலிஸ் செய்தால் கொடுமை! இந்தியப் போலிஸ் செய்தால் சேவை!!.

India takes up matter of diplomat’s daughter with US
New Delhi/Washington, May 26 (IANS) The Indian government has taken ‘very seriously’ the matter of a diplomat’s daughter being illegally arrested in New York, even as the US administration claimed that family members of diplomats do not enjoy immunity.

இப்போது இந்தியாவில் நடந்திருக்கும் பின்வரும் சம்பவத்திற்கு என்ன இழப்பீடு கொடுக்கமுடியும்? யார் கொடுப்பார்கள்? அப்படியே இழப்பீடு கொடுத்தாலும் இந்த இழப்பினை ஈடுகட்ட முடியுமா? குறைந்த பட்சம் அரசாங்கம் வருத்தமாவது அடையுமா?

இது ஒன்றுமட்டுமல்ல. பல சம்பவங்கள் இப்படி தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்பாவிகள் கையில் சிக்கினால் போதும். அவ்வளவுதான் காவலுக்கும் நீதிக்கும் ஒரே கொண்டாட்டம்தான். இந்தியாவில் போலிஸ் எது செய்தாலும் அது சேவையாகத்தான் கருதப்படும் போலிருக்கிறது!!.



ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12, 2011 மாலை மலர்

லக்கிம்பூர், ஜூன். 12-

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்தில் நிர்வாக வசதிக்காக புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் காவலாளி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவரது 14 வயது மகள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்த கட்டிடத்தின் பகுதிக்கு சென்றார். மாலை சென்ற அவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

இது குறித்து அந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே அந்த சிறுமி போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார் போலீஸ் விசாரணையில் அந்த சிறுமியை கற்பழித்து கொன்று பிணத்தை மரத்தில் தொங்க விட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.கே.ராய் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசாரை அவர் சஸ்பெண்டு செய்துள்ளார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உஸ்மானி, பிடுஷ்ண கோபால் பட்டேல் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

குற்றவாளியான போலீசாரை ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும், தனி நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தி உள்ளது.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.