இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, September 28, 2010

வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை

யார் வந்து எப்படிப் புகார் கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி கண்ணை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அனுப்பி பல குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை நண்பர்கள் அவர்கள் எழுதும் வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை என்று நிரூபித்துவிட்டார்கள். பின்வரும் செய்தியைப் படித்துவிட்டு அது சரிதான் என்று நீங்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது

செப்டம்பர் 28,2010 தினமலர்

கரூர் : கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கரூர், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). இவரது மனைவி லட்சுமி ஸ்ரீ (24). இருவருக்கும் திருமணமாகி நான்காண்டாகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், விரக்தியடைந்த லட்சுமி ஸ்ரீ, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். குடும்ப பிரச்னை என்பதால், இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுதாகர், லட்சுமி ஸ்ரீ ஆகியோரை வரவழைத்து ஏட்டு லதா கவுன்சிலிங் செய்தார். இதில், கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.

அப்போது, கோவை புதூர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரியும் லட்சுமி ஸ்ரீயின் அண்ணன் ஆனந்தராஜ் (30), போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, சுதாகர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏட்டு லதாவிடம் வாக்குவாதம் செய்தார். "கணவன், மனைவியே சமரசமாக செல்ல ஒத்துக்கொண்ட பின், வழக்கு பதிவு செய்ய முடியாது' என, ஏட்டு லதா கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், லதாவை உதைத்து, தாக்கிவிட்டு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு ஓடியுள்ளார். லதாவுக்கு, கை, கால், முகம், பல்லில் காயம் ஏற்பட்டடு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தப்பியோடிய ஆனந்தராஜை ஏட்டுக்கள் ராஜாமணி, சாமுவேல் ஆகியோர் டூவீலரில் துரத்திச் சென்று பிடித்தனர். ஆனந்தராஜை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



1 comment:

எண்ணங்கள் 13189034291840215795 said...

யார் வந்து எப்படிப் புகார் கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி கண்ணை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அனுப்பி பல குடும்பங்களை சிதைக்கும்

------------------------

நிஜம்..

ஒரு பெண் கிளப்பிய ஆதாரமற்ற புரளியை பாருங்கள்..

http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.