இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 08, 2009

இந்தக் காலத்துத் திருமணங்கள்

ஆடம்பர திருமண விருந்து : இளம் தம்பதியை பிரித்தது

தினமலர் டிசம்பர் 09,2009

குருவாயூர் : ஆடம்பர திருமணம், விருந்து என தடபுடலாக நடந்த திருமணத்திற்கு பின், பில் தொகை வந்ததும் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டது. மணமகள் தாலியை கழற்றி வீசியதால், திருமணம் நடந்த சில நாட்களிலேயே, காதல் தம்பதியர் பிரிந்தனர்.

சென்னையில், "மாடலிங்' துறையில் பணியாற்றி வந்த இளம்பெண்ணுக்கும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிலதிபரான இளைஞருக்கும், "இன்டர்நெட்' மூலம் காதல் ஏற்பட்டது. ஒரு வாரம் முன், சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். மணமகன் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கேரள கலாசாரப்படி, கடந்த 6ம் தேதி, திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர், நண்பர்களுக்கு, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஆடம்பர விருந்து வழங்கப்பட்டது. விருந்திற்கான பில் தொகையை கண்ட தம்பதியர் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், மணமகள் தாலியை கழட்டி வீசி எறிந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மனமொத்து காதலித்து, இரு இடங்களில் ஆடம்பர திருமணம், நட்சத்திர ஓட்டலில் விருந்து என ஜமாய்த்த சில நாட்களிலேயே, திருமண வாழ்க்கை முறிந்தது.

====================

இந்தக் காலத்தில் திருமணவாழ்வில் முறிவு ஏற்பட்டால் தாலியையும் கழற்றி எறியலாம், காவல் நிலையத்திற்கு சென்று பலவிதமான பொய்யான புகார்களும் தரலாம்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணி போல "வரதட்சணை கொடுமை சட்டம்" இருக்கிறது. வீட்டில் குழாயில் தண்ணீர் வரவில்லை, டாய்லெட்டில் அடைப்பு என்றால் கூட இந்த சட்டத்தை பயன்படுத்தலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இது தமாசு இல்லை. உண்மை. அரசாங்கம் மனைவிகளுக்கு மட்டும் கொடுத்துள்ள "சிறப்பு உரிமை".

எங்கள் தெருவிற்கு தண்ணீர் திறந்துவிடும் பணியாளர் என் கணவருடன் சேர்ந்து கொண்டு என்னால் வரதட்சணை தரமுடியவில்லை என்பதற்காக என் வீட்டிற்கு வரும் தண்ணீரை நிறுத்திவிட்டார். அதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என்று சொன்னால் போதும். உடனே புகாரில் பெயர் சேர்க்கப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். கடமைதவறாத காவலர்கள் பலர் கால நேரம் பார்க்காமல் நடுஇரவு, அதிகாலை போன்ற நேரங்களில் அந்த கைது நடவடிக்கையை மேற்கொள்ள ஏங்கிக் காத்துக்கிடக்கின்றனர். அதில் கிடைக்கும் பெருமையே தனிதான்!

கேட்பதற்கு முட்டாள்தனமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் இன்று நடந்துகொண்டிருக்கும் உண்மை. இந்த விஷயத்தில் உண்மை இருக்கிறதா என்று போலிஸ் "புலன் விசாரணை" செய்து 98% புகார்களில் டாய்லெட் அடைப்பிற்கு காரணம் வரதட்சணை கொடுமைதான் என்று கடமை தவறாமல் தங்களின் "புலன் விசாரணை" அறிக்கையை கோர்ட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கு நீதிபதி 5 - 7 ஆண்டுகள் இதை தீவிரமாக உள் விசாரணை செய்து பிறகு இது உண்மை இல்லை என்று சொன்னால் தான் கணவர் நிரபராதி என்று சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இப்படித்தான் இன்று நீதிமன்றங்கள் நாற்றம் பிடித்த வழக்குகளால் நிரம்பிவழிகிறது.

டாய்லெட் அடைப்பிற்கான காரணத்தைக் கூட நீதிமன்றங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் மனைவிகள் கையில் கட்டப்பட்டுள்ள மோடிமஸ்தான்கள் சேர்ந்து தயாரித்த தாயத்தின் வேலை தான். எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் அந்த தாயத்து தான் IPC498a.

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 4,51,496.
Total Pendency of Civil and Criminal Cases at the end of 31-12-08

Madras High Court
= 4,51,496

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி தமிழ்நாட்டிலுள்ள சார்பு நிலை நீதிமன்றங்களில் (சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர) நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 10,16,598

Total Pendency of Civil and Criminal Cases at the end of
31-12-08 in District and Subordinate Courts in Tamilnadu (Except Madras High Court) = 10,16,598



இதில் மேலும் ஒரு வசதி என்னவென்றால் மனைவிக்கு இந்த சலுகைகள்
எல்லாம் பைசா செலவில்லாமல் இலவசமாக கிடைக்கும். இன்னும் கொஞ்சம் "ஜிகினா" வேலைகள் செய்ய வேண்டுமென்றால் கணவரின் குடும்பத்திலுள்ள தத்தி நடக்கும் குழந்தை முதல் தள்ளாடி நிற்கும் கிழவர் வரை அனைவர் மீதும் நாகூசாமல் எந்த வகையான குற்றச்சாட்டுகளையும் எழுதித் தரலாம். எல்லாம் இலவசம்.

அரசாங்க செலவில் காகிதங்கள் சப்ளை செய்யப்படும், எத்தனை பக்கங்களாக இருந்தாலும் புகார்களை எழுத அரசு சம்பளத்தில் ஒரு எழுத்தர் காவல் நிலையத்தில் காத்துக்கொண்டிருப்பார். வித விதமாக எத்தனை பொய் சொன்னாலும் எந்த தண்டணையும் கிடையாது. பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான்.


பாவம் கணவர்கள்! இது போல பிரச்சனைகள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் சொல்ல முடியாது. ஏனென்றால் கணவரை பாதுகாக்க எந்த செக்ஷ்னும் சட்டத்தில் இல்லை. கணவருக்கு கழற்றி எறிய ஒன்றுமில்லையா என்று கேட்கிறீர்களா? ஏன் இல்லை. கணவர்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காமல் "மனைவி & கம்பெனி" அந்த சேவையை செய்துவிடுவார்கள். மனைவியால் கொடுக்கப்படும் பொய் கேசுகளுக்காக அந்தக் கணவர் காவல்நிலையம் முதல் நீதிமன்றம் வரை அலையும் போதே வக்கீல் பீஸ், ஜாமின் தொகை, அவ்வப்போது கையூட்டு, இதற்கிடையே மனைவிக்கு மாதாந்திர "பராமரிப்பு" செலவு என்று ஒரு பெரிய பட்டியலே போட்டு ஒன்று ஒன்றாக அவர்களே உருவி எடுத்துவிடுவார்கள். கடைசியில் கணவர் ஒரு நடமாடும் பிணமாகத்தான் இருப்பார். இது போதாதா?

மேலுள்ள செய்தியை நீங்கள் நம்பவில்லையென்றால் இங்கே சென்று பாருங்கள் www.498a.org




1 comment:

தமிழ். சரவணன் said...

//எங்கள் தெருவிற்கு தண்ணீர் திறந்துவிடும் பணியாளர் என் கணவருடன் சேர்ந்து கொண்டு என்னால் வரதட்சணை தரமுடியவில்லை என்பதற்காக என் வீட்டிற்கு வரும் தண்ணீரை நிறுத்திவிட்டார். அதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என்று சொன்னால் போதும். உடனே அதில் பெயர் சேர்க்கப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.//

ஆம் அப்பட்மான உண்மை.. எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயரும் "வரதட்சணை கேட்டு கொடுமை" படுத்துவதற்கு உடந்தையாக இருந்தார் என்று கட்டுக்கதை கட்டப்பட்டு அவரையும ஐந்து நாட்கள் புழல் சிறையில் அடைந்தனர் நமது காவல் தெய்வங்கள்... ஆகவே திருமணத்திற்கு போவதற்கு முன்பும், திருமணம் ஆன தம்பதிகள் அருகில் இருப்பவர்களும் ஊசாரக இருக்க வேண்டுகின்றேன்...


//தத்தி நடக்கும் குழந்தை முதல் தள்ளாடி நிற்கும் கிழவர் வரை அனைவர் மீதும் நாகூசாமல் எந்த வகையான குற்றச்சாட்டுகளையும் எழுதித் தரலாம். எல்லாம் இலவசம்.//

எனது தாயதருக்கும் எனது நண்பருக்கும் கள்ளஉறவு என்று ஆபாச வக்கிர கதைகட்டப்பட்டு (எழுதுவதற்கே அருவருப்பாவம் ஆபாசமாகும் இருக்கும் இந்த விசயம்) எனது தாயாரும் தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டனர்... (இந்த முதல் தகவல் அறிக்ககை எண் 4/2008 தாம்பரம் மகளிர் காவல்நிலையம், என்ற கன்றாவியை படிக்க விருப்பட்டால் tamizhsaran at gmail dot com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.