இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, December 20, 2009

அப்பாவி போலிஸ் (பகுதி - 2)

தினமலர் டிசம்பர் 21,2009
மதுரை : ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் உரிமையாளர் வெற்றிவேல் பாண்டியன் டிச.,17ல் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டார். விசாரணையில், செக் மோசடி வழக்கில் ஆந்திரா போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின் "பேக்ஸ்' மூலம் அவர்கள், மதுரை போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். அதேபோல், திருட்டு நகை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களை விசாரணைக்காக, தகவல் தெரிவிக்காமல் போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். இதைக் கண்டித்து உரிமையாளர்கள் கடையடைப்பு போராட் டங்களில் ஈடுபடுவதும், பின் போலீசார் சமரசம் செய்வதும் தொடர்கதையாக நடக்கிறது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், கைது செய்யும்போது சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து, 1996ல் சுப்ரீம் கோர்ட் 11 கட்டளைகளை பிறப்பித்தது.

1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.


2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.


3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.


4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.


5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.


6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.


7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.


8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.


9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.


10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.


11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.


போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :கோர்ட்டின் கட்டளைகளை பின்பற்றும் போது, நடைமுறை சிக்கல் உருவாகும். தகவல் தெரிவித்துவிட்டு கைது செய்ய வந்தால், குற்றவாளி தலைமறைவார். கைது செய்யப்பட்டது தெரிந்தால், உறவினர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவர். விசாரணை பாதிக்கும். உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றால், "நெஞ்சுவலி, வயிற்றுவலி' என்று ஏதாவது கூறி, மருத்துவமனையில் சேர்ந்துகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டர். கைது விபரத்தை மக்கள் பார்வைக்கு வைத்தால், தேவையில்லாத சர்ச்சை ஏற்படும், என்றார். 

=================================

பொய் வரதட்சணை கேசுகளில் அப்பாவிகளை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக மூலை முடுக்கிலுள்ள காவல்நிலையத்திற்கெல்லாம் அனுப்பப்பட்டிருந்தாலும்  அந்த சுற்றறிக்கையெல்லாம் காவல் நிலைய டாய்லெட் கிளின் செய்யும்  துடைப்பான்களாகத்தான் மதிக்கப்படுகிறது.  எத்தனை நீதிமன்றங்கள் எத்தனை சுற்றறிக்கை அனுப்பினாலும் அந்த சுற்றறிக்கையை அனுப்பிய நீதிபதி மட்டும் தான் அதை நினைவில் வைத்திருப்பார்.  அந்த அறிவுரைகளை பின்பற்றவேண்டியவர்களுக்கு அது ஒரு நாள் செய்தித்தாளில் வந்த செய்தி மட்டுமே.

 இது சென்னை உயர்நீதிமன்றம் 2008 ஆகஸ்ட்டில் அனுப்பிய பொய் வரதட்சணை கேசுகள் தொடர்பான நெறிமுறைகள்.

குடும்ப பிரச்னைகளில் சிறை? ஐகோர்ட் அறிவுரை-தினமலர் ஆகஸ்ட் 13,2008,

இதன்பிறகும் செய்தித்தாள்களில் எத்தனை கைது செய்திகளை நீங்கள் தினம் தினம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். 

பொய் வரதட்சணை கேசுகளில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால்  நடுஇரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வயதான பெரியவர்களை ஏதோ ஒரு மிகக் கொடிய தீவிரவாதி தப்பிவிடாமல் பிடித்துக்கொண்டு செல்லும் ஒரு பெருமிதத்துடன் இழுத்துச்செல்வார்கள். பொய்வழக்குப் போடும் பெண் தரப்பிலிருந்து எந்த அளவிற்கு "எனர்ஜி" கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு இந்த கைது நடவடிக்கையிலும்  ஒரு வேகம் இருக்கும். நீதிமன்ற சுற்றறிக்கைகள் எல்லாம் மதிக்க ஆளில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். 




1 comment:

தமிழ். சரவணன் said...

என்னுடைய குத்துவிளக்கு மனைவ(?????)ி கொடுத்த வரதட்சணை புகாரில். சென்னை உயர்நீதி மன்ற சமரச மையத்தில் உள்ள பொழுது அதை தாம்பரம் கோர்ட்டில் மறைந்து பொய்வழக்கு புணையப்பட்டு எனது தம்பி நண்பருடைய தாயார் கைது செய்யப்பட்டார்... என்ன செய்வது இதுபோல் வலைபூ பக்கத்தில் புலம்பத்தான் முடியும்...

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.