இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 21, 2010

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன் இந்த இணைப்பில் உள்ள செய்தியை படித்துக்கொள்ளுங்கள்.

பெண் லஞ்சம் வாங்கினால் குடியா மூழ்கிவிடும்?

• • • • • • • •

எஸ்.ஐ., ரேகாவுக்கு ஜாமீன் மறுப்பு

ஜூலை 21,2010 தினமலர்

சென்னை : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் பத்திரங்களை அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை செலுத்தியுள்ளார். ஆனால், மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என நிதி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் லட்சுமி புகார் செய்தார். யானைக்கவுனி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, லட்சுமியின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின், லட்சுமியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார். பின், அவர் கேட்ட பணத்தை கொடுத்தார். ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ரேகா புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்.ஐ., ரேகாவை மடக்கிப் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேகா, ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. ரேகா தரப்பில் ஆஜரான வக்கீல், நீண்ட நாட்களுக்கு பின் ரேகா கர்ப்பமாக உள்ளதால், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்க கோரினார். நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் வாங்கியதாக மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் ஊழல் போலீஸ் அதிகாரி என கூறப்படுகிறது. புழல் சிறையில் மருத்துவமனை உள்ளது. அங்கு பெண் டாக்டரும் உள்ளார். என்ன மருந்து தேவையோ அது வழங்கப்படும். சமீபத்தில் தான் ரேகா கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தன்மை, சூழ்நிலை கருதி ஜாமீன் வழங்க விருப்பமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

=======

ஒரு பெண் போலிஸ் அதிகாரியாக இருந்துகொண்டு புகார் கொடுக்க வந்த மற்றொரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய இந்தப் பெண் இப்போது “தாய்மையைக்” காரணம் காட்டி ஜாமின் கேட்கிறார். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது உண்மைதானோ?

தாய்மையுடன் இருக்கும்போது எப்படி ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற குற்றங்கள் செய்ய எண்ணம் தோன்றுகிறது. காலம் மாறிவிட்டது. தாய்மை என்பது இப்போதெல்லாம் குற்றம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ள பயன்படுத்தும் கேடயமாகிவிட்டது. இந்தத் தாய்மையின் புனிதத்தின் பெயரால்தானே பல ஒருதலைபட்சமான சட்டங்கள் பெண்களுக்காக என்று இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல பெண்கள் இப்படித்தவறாகத்தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் “தாய்மையின்” புனிதத்தைப் பெண்களே மதிக்காதபோது பிறகு பெண்களை யார் மதிப்பார்கள்?



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.