சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 07, 2010

காவல்துறைக்கு சரியான வேலை கொடுக்கும் பெண்கள்!!

போலிஸ் வாங்கும் சம்பளத்திற்கு சரியான வேலையை சில பெண்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சபாஷ். அரசாங்கம் சரியாக வேலை வாங்கவில்லையென்றால் இதுபோல பெண்கள்தான் வேலைகொடுக்கவேண்டும்.

தங்களது கற்பை பாதுகாத்துக்கொள்ளாமால் போனால் கூட பரவாயில்லை உடம்பையாவது பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் பாதுகாத்துக்கொள்ளாமல் எவனோ ஏமாற்றிவிட்டான் என்று காவல்துறையில் கற்பழிப்பு புகார் கொடுப்பது. அல்லது திருமணமாகிவிட்டால் கணவன் தன் வழிக்கு வரவில்லையென்றால் உடனே வரதட்சணை வழக்கு கொடுப்பது என்று தங்கள் பணியை செவ்வனே செய்துவரும் கண்மணிகள் இப்போது நாட்டில் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுக்காகத்தான் காவல்துறையே இருக்கிறது! இந்த “அப்பாவிகளை” காப்பதற்குத்தான் காவல்துறையோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ இதுபோன்ற வழக்குகளால் காவல்தெய்வங்களின் காட்டில் மழைதான்!!!

காவல்துறை இனிவரும் நாட்களில் மக்கள் திருடர்களிடம் பறிகொடுத்த பொருட்களை தேடுவதற்குப் பதிலாக “அப்பாவிப்” பெண்கள் தொலைத்த (தொலைப்பதற்கும் பறிகொடுப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இங்கு நன்கு கவனியுங்கள்) கற்பைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது!

ப.வேலூர்:காதலனுடன் சேர்த்து வைக்குமாறு, எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி, மகளிர் போலீசில் மனு அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அடுத்த எல்லைமேடு பகுதியைச் சேர்ந்த பூவேந்திரன் மகள் மீனா (13); பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகன் பெரியசாமி (22); ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர்.

பெரியசாமிக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் முயன்றதை அறிந்த மீனா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெரியசாமியிடம் கூறினார்; அதற்கு பெரியசாமி மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த மீனா, ப.வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், "பெரியசாமியும், நானும் கடந்த ஓராண்டாக காதலித்தோம். அவரும் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். தற்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அதனால், என்னை பெரியசாமியுடன் சேர்த்து வைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இரு வீட்டாரையும் அழைத்த மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
==============

விழுப்புரம்:காதலித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், பெண் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சின்னப் பொன்னம்பூண்டியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதி(20). இவர் தனது தாய் தேவகியுடன், நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அலுவலக வளாகம் முன் அமர்ந்து, திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். போலீசாரிடம் ஜோதி கூறுகையில்," இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்நிலையில் ஏழு மாத கர்ப்பமானேன். கடந்த மாதம், நேரில் சென்று திருமணம் செய்துகொள்ள கூறியபோது மறுத்த அய்யப்பன் என்னை மிரட்டி வருகிறார். இது குறித்து, கடந்த 6ம் தேதி சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை' என்றார்.ஜோதி கொடுத்த மனுவைப் பெற்றுக்கொண்ட, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்ளிட்ட போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.


1 comment:

rk guru said...

பதிவு நல்லா இருக்கு....வாழ்த்துகள்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.