இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 19, 2010

பெண் லஞ்சம் வாங்கினால் குடியா மூழ்கிவிடும்?

பெண்களுக்குப் பாதுகாப்பாக எத்தனையோ சட்டங்களை இயற்றியவர்கள் அவர்கள் லஞ்சம் வாங்கினால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். ஆண்கள் செய்யாததையா செய்துவிட்டார்கள். பெண் லஞ்சம் வாங்கினால் என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது? இதற்கும் தனியாக ஒரு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும். அதுவரை பல “அப்பாவிப் பெண்கள்” இப்படித்தான் மாட்டிக்கொண்டு கஷ்டப்படவேண்டியிருக்கிறது. பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகள் இப்படி லஞ்சத்தின் உதவியால்தானே பதிவாகிறது. அவற்றை மட்டும் கண்டுகொள்ளாமல் இப்படி நடக்கும் விஷயத்தை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்


யானைக்கவுனி: விசாரணையை முடிக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். லாரி நிறுவனத்தை மேம்படுத்த தனது வீட்டின் பத்திரங்களை, சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் சில மாதங்களுக்கு முன் அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை கட்டி தீர்த்துள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் காலதாமதம், கூடுதல் தவணை போன்ற காரணங்களுக்காக மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இது குறித்து, லட்சுமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். கமிஷனரின் உத்தரவின் பேரில், யானைக்கவுனி எஸ்.ஐ.,ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி, தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, அங்கிருந்து வீட்டின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின் லட்சுமியிடம், தனது விசாரணைக்காக எஸ்.ஐ., ரேகா மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார்.""நான் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கட்டாயப்படுத்தினார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., துர்க்கையாண்டி உத்தரவின்படி, எஸ்.பி., நிர்மல் குமார் ஜோஷி மேற்பார்வையில், டி.எஸ்,பி., சம்பந்தம், இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் கொண்ட போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரேகா கேட்டு கொண்டதன் பேரில், கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார் லட்சுமி. அப்போது கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில், டூவீலரில் காத்திருந்த ரேகா ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். அப்போது மற்றொரு ஆட்டோவில் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.ஐ.,ரேகாவை மடக்கிப் பிடித்தனர். லஞ்சமாக வாங்கிய ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

======================

கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பெண் போலிஸ் தான் கொடுத்தப் புகாரை மகளிர் காவல் நிலையத்தில் வாங்க மறுத்ததாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து புலம்பியிருந்தார். அவருக்கு பதில் சொல்லும் விதமாக அவரது துறையைச் சேர்ந்த தோழி மேற்கண்ட செய்தி மூலம் அந்த மர்ம முடிச்சை கட்டவிழ்த்திருக்கிறார்.

கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ்
ஜூலை 02,2010 தினமலர்



சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் செந்தில்குமாரி (34) என்பவர், "எனக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. தற்போது என்னை விட்டு, விட்டு வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட இருப்பதால், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சிப்காட் மகளிர் போலீசாரிடம் நேற்று காலை 8 மணிக்கும், திருவலம் போலீசாரிடம் காலை 9 மணிக்கும் புகார் செய்தார். செந்தில்குமாரி கொடுத்த புகாரை வாங்க போலீசார் மறுத்தனர். தானும் ஒரு போலீஸ் தான் என்று கூறியதையும் ஏற்கவில்லை. அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரி, திருமணத்தை தடுக்க நேரடியாக களம் இறங்கினார். ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். திருமண மண்டபத்தின் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்தார்.

போலீசான நான் கொடுத்த புகாரையே வாங்க மறுத்து விட்டனர். எனக்கே இந்த கதி என்றால், பொது மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
===============

மகளிர் காவல்நிலையங்களில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ அப்பாவிப் பெண்களும், ஆண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அப்பாவிகளை தரக்குறைவாக நடத்தி பொய் வழக்குகள் பதிவுசெய்து அநாகரிகமாக நடத்தும்போது அந்த அப்பாவிகளுக்கு ஏற்படுவது என்ன இன்பவேதனையா? எந்த ஒரு வரதட்சணை வழக்கும் முறையாக விசாரணை செய்யப்படுவதில்லை. புகார் பொய் என்று தெரிந்தாலும் புகாரில் இருப்பதை அப்படியே “வாந்தியெடுத்து” குற்றப்பத்திரிக்கையாக நீதிமன்றங்களுக்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிக்கும்போது அந்த அப்பாவிகள் என்ன இன்பத்தில் மூழ்கித் திளைக்கிறார்களா?

மகளிர் காவல் நிலையங்கள் பல அப்பாவிகளின் வாழ்வை சிதைக்கும் கூடாரங்கள். பொய் வரதட்சணை வழக்குகளின் களஞ்சியம். தனக்கு என்று வரும்போதுதான் அந்த வேதனை புரியும். சட்டங்கள் செய்யாததை அப்பாவிகளின் சாபம் தப்பாமல் செய்யும்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.