இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, July 08, 2010

ஈரானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம்

சமீபத்திய செய்தி என்னவென்றால் ஈரான் நாட்டில் கள்ள உறவு என்ற குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிற்கு கல்லால் அடித்து மரணதண்டனை என்று அந்த நாட்டு நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதை எதிர்த்து உலகநாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் கள்ள உறவிற்கு இப்படி ஒரு சட்டம் வைத்திருக்கிறார்கள். அது சரியா தவறா என்பது இங்கு விவாதமல்ல. இந்தியாவில் என்ன நடக்கிறது என்று ஒரு ஒப்பீடு செய்வதற்காக மட்டுமே இந்த செய்தி.

CNN News July 5, 2010
Iranian Woman Faces Stoning for Adultery
Mother of two could be put to death as soon as this weekend
  • Sakineh Ashtiani was sentenced to death on adultery charges
  • Human rights activist: only international pressure campaign can save her
  • Mother of two will be killed by stoning, says her Tehran lawyer
  • He says she was forced to confess under duress

ஆனால் இந்தியாவில் நிலைமையே தலைகீழ். இந்திய நாட்டு சட்டம் என்ன சொல்கிறதென்றால் கணவன் இருக்கும்போதே கள்ள உறவில் பெண் தானே விரும்பி ஈடுபட்டாலும் அந்தப் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக 1860-லேயே எழுதிவிட்டார்கள் நம்நாட்டு சட்ட மேதைகள்.



IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


சட்டம் கொடுமையாக இல்லாவிட்டாலும் தவறு செய்பவர்களை கொஞ்சம் யோசிக்கவைக்கும் அளவிலாவது இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அதற்குப் பெயர் சட்டம். நம்ம ஊரில் பெண்ணிற்கு சாதகமாக ஒருதலைபட்சமான சட்டங்கள் இருப்பதால் செய்திகள் எப்படியெல்லாம் வந்துகொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்தியாவில் நடப்பது..... தினமலர் செய்தி ஜூலை 09,2010

திருப்பரங்குன்றம்:பசுமலை ஜோன்ஸ்புரத்தை சேர்ந்தவர்கள் முருகேசன், மகாலட்சுமி. இவர்களது மகள் திவ்யா (21). தாய்மாமன் ராஜகோபாலுடன் திவ்வாவிற்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவருடன் திவ்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் சென்னை சென்றனர்.ராஜகோபால் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததின் பேரில் திவ்யாவை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். தாய் வீட்டில் இருக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது.

கடந்த ஒன்றாம் தேதி கோர்ட்டில் ஆஜரான போது, திவ்யா தாய் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியதால், மேலூரில் பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.கடந்த 5ல் திவ்யா, மகாலட்சுமி, ராஜகோபால், தாத்தா நவநீதகிருஷ்ணன் கோர்ட்டிற்கு வரும் போது, அருண் மற்றும் அவரது அண்ணன் அசோகன் வழிமறித்து மிரட்டினர். மகாலட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அருண், அசோகனை போலீசார் கைது செய்தனர்.
மேலுள்ள செய்தியில் திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. ஆனால் பெண் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். கணவனை பிடிக்கவில்லையென்றால் முறையாக விவாகரத்து செய்திருக்கலாமே. ஆனால் அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் என்ன செய்திருக்கிறது பாருங்கள். பத்திரமாக மகளிர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள். தாலி கட்டிய கணவனுக்கு அல்வா. (கள்ளக்)காதலருக்கு பெண்கொடுமை சட்டத்தில் சிறை. அருமையான சட்டம்.

அப்படியே இந்த சம்பவம் தலைகீழாக நடந்திருந்து கணவன் மனைவியை விட்டு சென்றிருந்தால் அப்போதும் கணவனுக்குத்தான் சிறை.

மற்ற செய்திகளையும் பாருங்கள்.

திருச்சி:"தன்னுடைய தாயுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் தாய் மீதும், அவர்களுக்கு உதவும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்ட பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இளம்பெண் கோரியுள்ளார்.


திண்டுக்கல்: கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில்அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும் ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார்.இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் என்றால் எவ்வளவு மரியாதை கிடைக்கிறது! எந்த தண்டணையும் கிடையாது! இதுபோன்ற பெண்களை கட்டுப்படுத்த எந்த சட்டமும் கிடையாது. மற்ற நாடுகளில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் தவறு செய்பவர்களை தண்டிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெண் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். பெண் செய்யும் குற்றத்திற்கும் ஆணைத்தான் தண்டிப்பார்கள். அதுதான் இந்தியநாட்டு சட்டத்தின் சிறப்பு. இன்னும் சொல்லப்போனால் பெண் தன் குற்றத்தை மறைத்து ஆண் மீது பழி சுமத்துவதற்காகவே பல சட்டங்களை பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவைதான் IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act. இதுபோன்ற வசதி பெண்களுக்கு வேறெந்த நாட்டிலாவது கிடைக்குமா?

செய்தியின் தொடக்கத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த தண்டணை கொடுக்கக்கூடாது என்று உலக நாடுகளும், மனித உரிமை சங்கங்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் பல அப்பாவித் தாய்மார்களும், ஆண்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் சட்டத்தின் மூலம் தினம் தினம் உயிரோடு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குரலுக்கு உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் ஒருவரும் இதுவரை செவி சாய்க்கவில்லையே? ஏன்?

2 comments:

சீ.பிரபாகரன் said...

ஆரோக்கியமான கருத்து. கணவனையோ குழந்தைகளையோ தவிக்கவிட்டு ஓடிப்போகும் ஓடுகாலிகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற சட்டம் வழிவகுக்கவேண்டும்.

Anonymous said...

கள்ள தொடர்பு இந்தியாவில் புனிதமான செயல் அதை தட்டி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. ஏற்று கொள்ள விட்டால் உங்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படும் . இந்திய பெண்ணுரிமை வாதிகளின் ஆதரவோடு போராட்டம் நடத்தப்படும் . ஜாக்கிரதை! அதற்கு இந்திய காவல்துறையும் நீதித்துறையும் முழு ஆதரவு தெரிவிக்கும். எனவே கள்ள தொடர்பை இந்தியாவில் சட்டபூர்வமாக்கி விட்டால் நம் நாடு முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல முடியும். இல்லையேல் ...........................

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.