சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 21, 2010

தன்வினை தன்னைச் சுடுமா? கண்டிப்பாகச் சுடும்.

செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நன்கு யோசித்து பிறகுதான் செய்யவேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்று அன்று மூதாதையர்கள் சொன்னார்கள். அதைப் பின்பற்றி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்கள். பிறகு அதையே அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்று சொன்னார்கள். இவ்வளவு சொல்லியும் அதை பெண்களுக்கு எடுத்துரைக்க சரியான ஆசிரியர் இல்லை. இந்த ஆன்மிக, அறிவியல் உண்மைகளை இந்தக் காலத்துப் பெண்கள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்கள் நன்கு உணரவேண்டும். அதற்குப் பெண்கள் வாரியம்தான் உதவி செய்யவேண்டும். வேறுயாரும் பொய்வழக்குப்போடும் பெண்களைக் காப்பாற்றவே முடியாது.கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை
ஜூலை 22,2010 தினமலர்

சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்குமாரின் சகோதரர் நாகராஜனும் தன் மனைவியுடன் இதே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சொத்துப் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே செலவுகளை கவனித்து வந்தனர். பொன்குமாரின் மனைவி அபிராமி, தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, மாம்பலம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலீசில் அபிராமியின் தாயார் ஜோன் சீனிவாசன், "பொன்குமாரின் சகோதரர் நாகராஜன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சகோதரர் யுவகிருஷ்ணன் ஆகியோர் தான் தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளனர்' என புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.