சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்
தினமலர் ஜூலை 21, 2010

கருத்து சொல்லும் படம்
பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 67 பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதன்பின் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., பப்லு தேவை சபைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது, மற்ற உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டனர். இந்த மல்லுக்கட்டின் போது, சபாநாயகரின் இருக்கையை நோக்கி செருப்பு ஒன்றும் வீசப்பட்டது. செருப்பை யார் வீசியது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்தச் செருப்பு, சபாநாயகர் மீது படவில்லை. இதேபோல், பீகார் சட்டசபை மேலவைக்கு வெளியேயும் பெரும் அமளி மற்றும் நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை பெண் காவலர்கள் சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டனர். சபையின் வெளியேதான் இந்த நிலைமை என்றால், உள்ளேயும் கடும் அமளி நிலவியது. ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி., சஞ்சய் பிரசாத், மேஜை மீதிருந்த மைக்குகளை பிடுங்கி ஆளும் கட்சியினரை நோக்கி எறிந்தார். சட்டசபை மேலவையில் ரகளையில் ஈடுபட்டதற்காக நேற்று முன்தினமே 14 எம்.எல்.சி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
=============
No comments:
Post a Comment