சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, July 03, 2010

கள்ளச்சாராய (கள்ளக்) காதலியுடன் ஜல்ஸா செய்த போலிஸ் ஏட்டு

கள்ளச்சாராய (கள்ளக்) காதலியுடன் ஜல்ஸா செய்யும் போலிஸ் ஏட்டு - ரொம்ப காமெடியான விஷயம்! போலிஸ் இப்போதெல்லாம் ரொம்ப அப்பாவியாக இருக்கிறார்களே!

போதையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த ஏட்டு கைது

ஜூலை 03,2010 தினமலர்

தர்மபுரி : பென்னாகரம் அருகே, கள்ளக்காதலியுடன் போதையில் உல்லாசமாக இருந்த ஏட்டை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், போலீஸ் ஏட்டாக குமரன் (48) பணிபுரிகிறார். இவர், சில ஆண்டுக்கு முன் பென்னாகரம் அடுத்த ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்தார்.

சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த அம்மாசியின் மனைவி சுமதி (37). இவர், அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார். கள்ளச்சாராய "ரெய்டின்' போது, ஏட்டு குமரனுக்கும் சுமதிக்கும் இடையே பழக்கமானது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். சாராய தொழில் செய்து வரும் சுமதியின் கணவரும் இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை.

சில ஆண்டுக்கு முன், ஏரியூரிலிருந்து அதியமான் கோட்டைக்கு, குமரன் மாற்றப்பட்டார். இருப்பினும், இருவருக்கும் இடையேயான உறவு தொடர்ந்தது. கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிக்கு சென்ற குமரனுக்கு, மூன்று நாள் விடுமுறை கிடைத்தது. அந்த மூன்று நாட்களும், அவர் சீலநாயக்கனூரில் சுமதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, சுமதியின் வீட்டில் குமரன் இருந்த போது, அங்கு அம்மாசியின் தங்கை கணவர் குப்பண்ணன் வந்தார். "நீங்கள் யார், எங்கு வந்தீர்கள்?' என, குமரனிடம் விசாரித்தார். இதில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், போதையில் இருந்த குமரன், கல்லால் குப்பண்ணனை தாக்கினார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குப்பண்ணன் தாக்கப்பட்ட தகவல் கிராம மக்கள் மத்தியில் பரவி, அனைவரும் சுமதியின் வீட்டில் இருந்த குமரனை சுற்றி வளைத்து பிடித்தனர். ஏரியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார், குமரனை கைது செய்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.2 comments:

ராம்ஜி_யாஹூ said...

VERY SAD TO HEAR

பெண்கள் நாட்டின் கண்கள் said...

ஏட்டு மாட்டிக்கொண்டார் என்பதற்காக வருத்தப்படுகிறீர்களா? :)

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.