இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 14, 2010

எதிர்கால மாணவிக்குத் தேவை புத்தகமா அல்லது கர்ப்பமா?

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தீர்க்க தரிசனமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் எதிர்கால கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும் நிலை எப்படி இருக்கும் என்று சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஒரு புதுமையான சமூக சீர்திருத்தக் கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்ப்ப காலத்தில் சட்டக் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் வருகைப் பதிவு குறைந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவிகள் தொடுத்த வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது முடிவுரையில் அந்த புரட்சிகரமான கருத்தையும் சேர்த்து சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

if any female candidate is deprived or detained in any of the semester just on the ground that she could not attend classes being in the advanced stage of pregnancy or due to the delivery of the child, then such an act on the part of any of the university or college would not only be completely in negation of the conscience of the Constitution of India but also of the women rights and gender equality this nation has long been striving for. It is a saying that “Motherhood is priced of God, at price no man may dare to lessen or misunderstand”. By not granting these students relaxation, we will be making motherhood a crime which no civilized democracy in the history of mankind has ever done or will ever do. We cannot make them pay the price for the glory that is motherhood.

தாய்மை என்பது புனிதமானது. இது திருமணத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் ஒரு உடல் நிலை மாறுபாடு. இது வியாதியல்ல. அதனால் இதனைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்கும் மாணவியரை வருகைப்பதிவு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் தேர்வு எழுத அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று மாணவியர் தொடுத்த வழக்கில் நீதிபதி தீர்ப்புக் கூறினார். மிகவும் சரிதான்.

ஆனால், அந்தத் தீர்ப்பின் முடிவுரையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்தியப் பெண்களின் கற்பு, கலவு பற்றி கூறிய தீர்ப்பை மேற்கோள் காட்டி இனிவரும் காலங்களில் திருமணம் செய்யாமல் கர்ப்பம் தரித்து பல மாணவிகள் கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் பல்கலைக்கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் கூடுதல் அறிவுரையும் வழங்கியிருக்கிறது. திருமணம் செய்யாமல் கூடி வாழ்வது தவறில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் வளைந்துகொடுக்கவேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நீதிபதி தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருகிறார். தீர்ப்பின் அந்தப் பகுதியை கீழே படித்துப்பாருங்கள்.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 12.07.2010
முழுத் தீர்ப்பை இங்கே காணலாம் W.P.(C) No. 8302/2009

“It would not be inappropriate to mention at this juncture the recent rulings of the Apex Court in the cases of Lata Singh vs. State Of U.P AIR 2006 SC 2522 and S. Khushboo vs. Kanniamal & Anr MANU/SC/0310/2010 where it has given liberty to the live-in relationship from the shackles of being an offence and also in the latter case where it has held that premarital sex is not an offence. The society today is changing at a rapid pace and we must be in tune with the realities and not hold on to archaic social mores. Once such a right, however unpopular, is recognized then it cannot be ruled out that there can be more cases of girl students proceeding on maternity leave when while they are still in college. Law should be an instrument of social change and not a defender of it. Motherhood is not a medical condition but a promise. We all kowtow to our mothers to whom we owe our existence and to punish a woman for becoming a mother would surely be the mother of all ironies.

Bar Council of India, although not a party in the present writ petitions, is hereby suggested to make rules for women students claiming relaxation on ground of maternity relief so that they are not deprived of appearing in the LLB
examinations due to pregnancy.

தாய்மை என்பது புனிதமானதுதான். ஆனால் அந்த புனிதத்தை எந்த வகையில் பெண் பெற நினைக்கிறாள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருமணம் செய்யாமல் கூடி வாழும் நிலை சமூகத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கேற்ப சட்டங்கள் மாறவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை சட்டங்கள் ஆதரிக்கவேண்டும். அதே சமயம் சமுதாயம் தவறான பாதையில் மாற்றம் அடைந்து கொண்டிருந்தால் அதை தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கவேண்டும். சமுதாய மாற்றம் என்ற பெயரில் தன்னிச்சைப்படி சமுதாயம் செல்லும் வழியில் தானும் செல்வது சட்டமா? அல்லது சமுதாயத்திற்கு நல்ல வழியைக் காட்டி ஆரோக்கியமான சமுதாய மாற்றத்திற்கு உதவுவது சட்டமா?

கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி பலருடன் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் பெருகட்டும்!!!

2 comments:

Robin said...

//கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி யாருடனும் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் வளரட்டும்!!!
// :(

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு........வாழ்த்துகள்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.