சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, November 17, 2009

பெண் கொடுமை

ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைக்குப் பெயர் தான் பெண் கொடுமை. அதற்கு ஒரு உதாரணம் தான் கீழுள்ள செய்தி. பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவி தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பெண்ணுருவில் இருக்கும் 498A-பேய்களால் செய்யப்படும் கொடுமை தான் பெண் கொடுமை.
==================

ரூ.200 லஞ்சம் பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
தினமலர்-நவம்பர் 18,2009


ஸ்ரீவில்லிபுத்தூர் : அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 200 ரூபாய் பெறுவதற்காக, கடந்த 2003 செப்.15ம் தேதி நகராட்சியில் விண்ணப்பித்தார்.அப்போது அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர் சரஸ்வதி. இவர் ஆறுமுகத்தின் விண்ணப்பத்தை, கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க 200 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆறுமுகம் இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். 2003 செப்.23 ல் மாலை 5மணிக்கு ஆறுமுகம் சரஸ்வதியிடம் 200 ரூபாயை கொடுத்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவி., தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய சரஸ்வதிக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.