182 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம் கர்நாடகாவில் குறும்படம் ரெடி
தினமலர் - நவம்பர் 01,2009
தாவணகெரே: இந்தியாவின் பாரம்பரியமான கூட்டு குடும்ப கலாசாரம் அழிந்து வரும் காலகட்டத்தில், கர்நாடக மாநிலத்தில், 182 உறுப்பினர்களை கொண்ட கூட்டு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது.கர்நாடக மாநிலம், தார்வாத் மாவட்டம், லோக்கூர் பகுதியில் நரசிங்நாவர் குடும்பம் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 182. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.இந்த குடும்பத்தினர் தற்போது, அழிந்து வரும் கருத்தான கூட்டுக் குடும்ப தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றனர். இவர்களை வைத்து, எழுத்தாளர்களான ஆனந்த் மற்றும் மதுரா கட்டி தம்பதியினர் குறும்படம் ஒன்று எடுத்துள்ளனர். இதற்காக, படப்பிடிப்புக் குழுவினர் ஒரு வாரம், லோக்கூரில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்தனர்.
இது குறித்து ஆனந்த் மதுரா கட்டி கூறியதாவது:இந்த குறும்படம், இந்தியா மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய சமூக கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கல் உட்பட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும், இந்த சிறிய விவசாய குடும்பத்தினர், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர். இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த குறும்படத்தில், இந்திய கிராமப்புற கலாசாரமும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலேயே, இவர்கள் தான், மிகப் பெரிய கூட்டுக்குடும்பத்தினர். இவர்கள் அனைவரும் ஒரே சமையலறையிலேயே சமைக் கின்றனர்.இவ்வாறு அவர்கூறினார். இதுகுறித்து ஆனந்த் கட்டி கூறுகையில், "இந்த குறும்படத்தை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதலில் கர்நாடகாவில் வெளியிடுவோம். இது இந்திய கலாசாரத்தை வெளி உலகத்திற்கு காட்டும் நான்காவது குறும்படம்' என்றார்.
==========
இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இனி "டாக்குமெண்டரி படங்களிலும்", வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சிந்து சமவெளி நாகரித்தைப் பற்றி படிப்பது போலவும் தான் இனி அறிந்து கொள்ள முடியும். கூட்டுக் குடும்பங்களை சிதைக்கும் தவறான சட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை அப்படித் தலைகீழாக புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றது.
வயதான பெற்றோர்களில் பெரும்பாலோர் மருமகள் கொடுத்த பொய் வரதட்சணை வழக்குகளால் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், மற்றும் தங்களது மகனின் சிதைந்து போன வாழ்க்கையை நினைத்து மனம் நொந்து நீதியைத் தேடி கோயில்களிலும் நிம்மதி இழந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். பொய் புகார்களில் சிக்காத மீதம் இருக்கும் கொஞ்சம் பேர் மருமகள்களால் விரட்டப்பட்டு முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.
இந்த வயதான தாய், தந்தையர்கள் படும் மன வேதனைக்கு இந்த சமுதாயம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றப்பட்ட நாட்டில் இப்போது முறைப்படுத்தப்படாத கொடிய சட்டங்களால் வயதான தாய்மார்களும், தந்தையரும் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்ற தாய், தந்தையை போற்றிப் பாதுகாக்காத சமுதாயம் நிச்சயம் அழிவைத்தான் சந்திக்கும்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment