சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 12, 2009

கூலிப்படை வைத்து கணவரைக் கொன்ற மனைவி

பாவம் அப்பாவி ஆண்கள்! படித்த நகரத்துப் பெண்களை திருமணம் செய்தால் பொய்யான 498A கேஸில் குடும்பத்தோடு மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள். கல்வியறிவில்லாத கிராமப்புற பெண்களை திருமணம் செய்தால் அவளின் கள்ளக்காதலுக்காக கொல்லப்படுகிறார்கள். இன்றைய சமுதாயத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கு ஒரு ஆபத்தான புதைகுழிபோல் மாறிவிட்டது.

பட்டி தொட்டி முதல் மாநகரம் வரை கள்ளக்காதலும், பொய் வழக்குகளும் பெண்ணுரிமை என்ற பெயரில் தறிகெட்டுத் திக்குத் தெரியாமல் ரத்த ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இனிவரப்போகும் நாட்களில் ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் கள்ளக்காதல் மற்றும் பொய்வழக்குப் போடும் மனைவிகள் செய்யும் கொலைகளால் அப்பாவி கணவர்களின் ரத்தம் தான் ஆறாக ஓடப்போகிறது!
=====================


கூலிப்படையால் கணவன் கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

தினமலர் நவம்பர் 13,2009


திருநெல்வேலி: நெல்லை அருகே கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்(36). இவருக்கும் கல்லிடைகுறிச்சி அன்னலட்சுமி(29)க்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன், அன்னலட்சுமிக்கு கல்லிடைகுறிச்சியை சேர்ந்த உறவினர் முத்துகிருஷ்ணன்(32) என்பவருடன் இருந்த தொடர்பு திருமணத்திற்கு பின் தொடர்ந்தது. உறவினர்கள் என்பதால் ஆரம்பத்தில் இதனை தங்கபாண்டியன் கண்டுகொள்ளவில்லை. பின் மனைவியை கண்டித்தார். இதனால் அன்னலட்சுமியும், முத்துகிருஷ்ணனும் சேர்ந்து தங்கப்பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டனர். 2008 நவம்பர் 13ம் தேதி முத்துகிருஷ்ணன், தங்கப்பாண்டியனை கல்லிடைகுறிச்சி, கன்னடியன்கால் பகுதிக்கு அழைத்துச்சென்று மதுவாங்கி கொடுத்தார். கூலிப்படையாக செயல்படும் வள்ளியூர் கணேசன், பட்டுராஜன், அருணாசலமுத்துபாண்டி, இசக்கிமுத்து ஆகியோர் அங்கு ஏற்கனவே காத்திருந்தனர்.

மதுமயக்கத்தில் இருந்த தங்கப்பாண்டியனை அனைவரும் சேர்ந்து அடித்து கொலைசெய்து கன்னடியன் வாய்க்காலில் போட்டனர். மறுநாள் உடல் கிடப்பதை அறிந்த போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்தனர். ஆனால் துப்புதுலக்கவில்லை. அண்மையில் முத்துகிருஷ்ணன், ஒரு திருட்டுவழக்கு விசாரணையில் தங்கப்பாண்டியனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து முத்துகிருஷ்ணன், அன்னலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினரை போலீசார் தேடிவருகின்றனர்.

=================
1 comment:

Anonymous said...

கொடுமை. சமீப காலமாக இத்தகு மரணங்கள் அதிகமாக சம்பவிக்கின்றன. இத்தகு ஈனப்பிறவிகள் ஆண்களிலும் பெண்களிலும் இருந்து கொண்டுதான் உள்ளார்கள்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.