சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, November 17, 2009

திருமணமே ஒரு கிரிமினல் குற்றம் தான்!

தினமலர் -நவம்பர் 18,2009

நாக்பூர் :
"திருமணத்தின் போது அன்பளிப்பாக கொடுக்கப்படும் பொருட் களை வழக்கமாக கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களாக எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர வரதட்சணை கணக்கில் கொள்ளக் கூடாது' என்று மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
வரதட்சணை வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் அல்லது வரதட்சணை கொடுக்க தூண்டுபவர்கள் ஆகியோருக்கு வரதட்சணை ஒழிப்பு சட்டம், 1986ம் கீழ் ஐந்து ஆண்டுக்கு குறையாத சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.நாக்பூரை சேர்ந்தவர் பூஷண்; இவருடன் பிரச்னை காரணமாக பிரிந்து விட்ட மனைவி, அவர் தந்தை போலீசில் புகார் செய்தனர். வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டது. திருமணத்தின் போது மணமகன் பெற்ற ஏகப்பட்ட பரிசுப்பொருட்களும் வரதட்சணை கணக்கில் சேர்த்து, போலீசில் புகார் செய்திருந்தனர்.இதை எதிர்த்து, மணமகன் மற்றும் அவர் தாய், மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்சில் மனு செய்தனர்.

இதை விசாரித்த கோர்ட், "திருமணத்தின் போது பெறப்படும் பரிசுப்பொருட்களை வரதட்சணையாக கருத முடியாது; அது வழக்கமாக மரபுப்படி அளிக்கப்படும் பரிசுகள் தான். அதனால், ஒருவரின் வாழ்க் கை பொருளாதார தரம் உயர வாய்ப்பில்லை' என்று தெரிவித்தது.

================

இந்தியத் திருமணங்களில் நடக்கும் ஒரு நம்பமுடியாத விஷயம் என்னவென்றால் பெண்ணிற்கு திருமணத்தின் போது அவரது பெற்றோர்கள் தானாகவே முன்வந்து பல பரிசுப்பொருட்களை கொடுப்பார்கள். பிறகு ஏதோ காரணத்தால் திருமணமுறிவு ஏற்படும் சூழல் ஏற்படும் போது அந்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் வரதட்சணை என்று பெயர் மாற்றி போலிஸில் புகார் கொடுத்துவிடுவார்கள்.

அவர்கள் கூற்றுப்படி திருமணத்தின்போது பெண்ணை ஒரு துணி கூட இல்லாமல் தான் திருமணம் செய்து அனுப்பியிருக்கவேண்டும் ! ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் வரதட்சணை புகாரில் திருமணத்தின்போது பெண் உடுத்தியிருந்த உடை முதல் அனைத்து பொருட்களும் மாப்பிள்ளை
வீட்டார் கட்டாயப்படுத்தி கேட்ட வரதட்சணையாக லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இதில் மற்றொரு காமெடி என்னவென்றால் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் நடந்த தேதி பெரும்பாலும் நிச்சயதார்த்தம் நடந்த தேதியிலிருந்து தான் ஆரம்பிக்கும். எனவே பெண்ணை நிச்சயம் செய்து திருமணம் செய்ததே கிரிமினல் குற்றமாகத்தான் கருதப்படும். ஆகையால் இந்தியாவில் திருமணம் என்பது ஆண்களைப் பொறுத்தவரை ஒரு கிரிமினல் குற்றம் தான். வேண்டுமென்றால் ஒரு நல்ல கைதேர்ந்த "டெம்ப்ளேட் வக்கிலிடம்" 498A புகாருக்கான "டெம்ப்ளேட்டை" வாங்கி படித்துப் பாருங்கள்.

என்ன கலாச்சாரமோ? என்ன பண்பாடோ? நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தான் இதற்கெல்லாம் விளக்கம் சொல்லவேண்டியிருக்கிறது.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.