இந்த அராஜகச்செயலை உச்ச நீதிமன்றம் சட்ட தீவிரவாதம் என்று வன்மையாக கண்டித்திருக்கிறது. தலைமை நீதிபதி பல முறை இதனைப் பற்றி தனது வருத்தமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதியும் இந்த அவல நிலைப்பற்றி ஒரு மாநாட்டில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் அரசு தரப்பிலிருந்து இதனை தடுப்பதற்கோ, அப்பாவிகளை இந்த சட்டதீவிரவாதத்திலிருந்து காப்பதற்கோ யாரும் எந்த வித நடவடிக்கையையும் எடுப்பதற்கு இதுவரை முன்வரவில்லை.
அதற்குப் பதிலாக மேலும் மேலும் பல ஒருதலைபட்சமான சட்டங்கள் அடுக்கடுக்காக இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து சட்டங்களிலும் ஆண்கள் எப்போதும் குற்றவாளியாகவும், பெண்கள் எப்போதும் ஒன்றுமறியா அப்பாவிகள் போலவும் ஒருதலைபட்சமாக சித்தரிக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமை.
அதேசமயம் இந்த நவநாகரீக மங்கைகளின் அராஜக வன்முறைகளிலிருந்து அப்பாவி ஆண்களைப் பாதுகாக்க ஒரு சட்டமும் கிடையாது என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் எப்படி பயன்படுத்தப்படுதுகின்றன என்பதைத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டியுள்ளார்கள். திரைப்படம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். எனவே பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான இன்றைய சமூக நடைமுறையை இங்கே காணுங்கள்.
No comments:
Post a Comment