இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, November 25, 2009

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலம்


Dinamalar: நவம்பர் 26,2009


ஐதராபாத் : மனைவியின் பேச்சை கேட்டு போலீஸ் தொல்லைக்கு ஆளான கணவனுக்கு மனித உரிமை கமிஷன் கைகொடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வேணுகோபால் கிருஷ்ணா. இவர் இங்குள்ள ரயில்வே பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மனைவியுடன் தகராறு ஏற்பட்டு, பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போதும், மனைவி மூலம் அவருக்கு பிரச்னைகள் வந்து கொண்டிருந்தன. சமீபத்தில் மாநில மனித உரிமை கமிஷனிடம் அவர் ஒரு புகார் அளித்துள்ளார்."ஐந்து ஆண்டாக நான் மனைவியை பிரிந்து வாழ்கிறேன். என் மீது அவர் தொடுத்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருகிறேன்.

ஆனால், உள்ளூர் போலீஸ் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை இருந்து வருகிறது.
இவர்களின் தொல்லை காரணமாக நான் தெருத்தெருவாக திரிய வேண்டிய நிலை உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று மனுவில் வேணுகோபால் கூறியுள்ளார்.புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுபாஷன் ரெட்டி, "திருமணத் தகராறுகளில் தலையிடவேண்டாம்' என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.




1 comment:

தமிழ். சரவணன் said...

திருச்சியை சேர்ந்தவர் கலைசெல்வன் குவைத்தில் என்ஜினீயர் - பணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம் ரூ.25 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் கணவர்

http://tamil498a.blogspot.com/2009/11/25.html

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.