புதுடில்லி :
வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும்.
கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின. "கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார். இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது.
"இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது.
எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
===============
அரசாங்கம் தவறான சட்டத்தை திருத்தி பல அப்பாவித் தாய்மார்களையும், சகோதரிகளையும், குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிருந்து காப்பாற்ற நினைத்தாலும் அதற்குத் தடையாக இருப்பது பெண்கள் நலனிற்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புகள் தான்.
உலகத்தின் எந்த ஒரு மூலையில் ஒரு அப்பாவிப் பெண் அழுதுகொண்டிருந்தாலும் அதன் பின்னனியில் மற்றொரு பெண் தான் இருப்பாள் என்பதை பெண்கள் அமைப்புகள் நிரூபித்துவிட்டன!
1 comment:
*********
உலகத்தின் எந்த ஒரு மூலையில் ஒரு அப்பாவிப் பெண் அழுதுகொண்டிருந்தாலும் அதன் பின்னனியில் மற்றொரு பெண் தான் இருப்பாள் என்பதை பெண்கள் அமைப்புகள் நிரூபித்துவிட்டன!
****
நிதர்சனமான உண்மை. படித்தாலும் நம்மூர் பெண்களில் சிந்திப்பவர்கள் சிலரே. கள்ளக் காதலை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் வளர்ந்தாலும் வளரும ேஒழியசேர்ந்து வாழ்க்கை நடத்தும் எண்ணம் வெகு பேருக்கு இல்லை. இருந்தாலும் சக தாய், தமங்கையர்களால் அந்த எண்ணம் வேரோடு பிடுங்கி எரியப்படுகிறது
Post a Comment