பெண் மீது தற்கொலை முயற்சி வழக்கு: காதலன் மீது கற்பழிப்பு வழக்கு
நவம்பர் 09,2009
நாகர்கோவில்: கொட்டும் மழையில் போராட்டம் நடத்தி, காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண் விவகாரத்தில், போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கேசவன்புதூரைச் சேர்ந்தவர் பத்மா மகேஸ்வரி(24).
இவர், நாகர்கோவிலில் ஒரு ஜுவல்லரியில் வேலை பார்த்தபோது, வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த முகமது பாபா காசிம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கும் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், முகமது பாபா காசிமுக்கு ஈத்தமொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட பத்மா, காதலன் வீட்டு முன் மழையில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதனால், ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண்ணுடன் முகமது பாவா காசிமுக்கு நடக்க இருந்த திருமணம் ரத்தானது. காதலன் ஏமாற்றிய சோகத்தில், கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார் பத்மா. இதைத் தொடர்ந்து, முகமது பாபா காசிம் மீது வடசேரி போலீசார், கற்பழிப்பு வழக்கும், பத்மா மகேஸ்வரி மீது கன்னியாகுமரி போலீசார், தற்கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
==================
மேலுள்ள செய்தியை படித்தவுடன் இந்த வீடியோவையும் பார்த்து விடுங்கள்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment