பெண்கள் மிகவும் மென்மையானவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் போய்விட்டது. கீழுள்ள செய்தியில் பாருங்கள் கேவலம் கள்ளத்தொடர்புக்காக ஒரு பெண் மற்றொரு பெண்ணின் அதுவும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை எப்படி கொடூரமாக சிதைக்க முயற்சி செய்திருக்கிறார். அதுவும் ஒரு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பான பதவியில் இருக்கும் இவர் செய்திருக்கும் பாதகச்செயல் வன்மைபடைத்த பெண்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு கண் மூடித்தனமாக சட்டங்களை ஒரு தலைபட்சமாக செயல்படுத்துபவர்களின் முகத்தில் கரி பூசியிருக்கிறது.
இதுபோன்ற வன்குணமுடையவர்கள் தான் பெரும்பாலும் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி சமுதாயத்தை சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
வன்மை புரிவதில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் இருக்கும்போது சட்டங்கள் மட்டும் பெண்களுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக இருப்பது ஏன் ?
============================
கொடூர குணம் கொண்ட கவுன்சிலர் கைது
நவம்பர் 04,2009
திருவெறும்பூர்: திருச்சி அருகே, கள்ளக்காதலுக்காக, பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி, எச்.ஐ.வி., பாதித்தவரின் ரத்தத்தை, அவரது உடலில் செலுத்த முயன்ற வழக்கில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே மேலகுமரேசபுரம் காலனியில் வசிக்கும் ஞானஅருள்ராஜ் மகள் சத்யா (15). பத்தாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பழனிவேல் மகன் குமார மதிஸ்(23). சத்யா மேஜரானவுடன், குமார மதிசுக்கு திருமணம் செய்து விடலாம் என்று இரு குடும்பத்தினரும் பேசி வைத்திருந்தனர். திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜகுமாரி(32)க்கும், குமார மதிசுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
சத்யாவை, குமார மதிஸ் திருமணம் செய்து விட்டால், அவருடனான உறவை தொடர முடியாது என்று எண்ணிய ராஜகுமாரி, தன் வீட்டருகில் வசிக்கும் கண்மணி(27) சரஸ்வதி(40) இருவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, எய்ட்ஸ் நோயாளி ஒருவரிடமிருந்து ரத்தம் எடுத்து, அதை சத்யா உடலில் செலுத்தினால், குமார மதிஸ், சத்யாவை திருமணம் செய்யாமல் ஒதுங்கி விடுவார் என்று ராஜகுமாரி திட்டம் போட்டார்.
கடந்த ஜூன் 24ம் தேதி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட செல்வியிடம் ரத்தம் சேகரித்துக் கொண்டு திருவெறும்பூர் கல்லணை ரோட்டில் காத்திருந்தார். ராஜகுமாரி தோழி கண்மணி, தாலுகா ஆபீஸ் செல்வதாகக் கூறி, சத்யாவை, திருவெறும்பூர் அழைத்து வந்தார். அங்கு தயார் நிலையில் இருந்த காரில், சத்யாவை அழைத்துக் கொண்டு கல்லணை பிரிவு ரோடு வந்தார். அங்கிருந்த ராஜகுமாரி, சரஸ்வதி இருவரும், காரில் ஏறிக்கொண்டனர். திருச்சி - துறையூர் அருகிலுள்ள புளியஞ்சோலை பகுதிக்குச் சென்றனர்.
அங்கு, தாங்கள் கொண்டு வந்த எச்.ஐ.வி., ரத்தத்தை சத்யா உடலில் ஏற்ற முயற்சித்தனர். ரத்தம் உறைந்து விட்டதால், திட்டம் நிறைவேறவில்லை. சத்யாவை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு, அவரது வீட்டருகே விட்டுச் சென்று விட்டனர். சத்யா, மனரீதியாக பாதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன், தாயிடம் விவரம் கூறினார். அவர், திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். கவுன்சிலர் ராஜகுமாரி, சரஸ்வதி இருவரையும் போலீசார் கைது செய்து, திருச்சி ஆறாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான கண்மணியை தேடுகின்றனர்.
=====================
மேலுள்ள செய்தியில் தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கும் கிடைக்கக்கூடாது என்ற அழிவுநோக்கம் இருப்பது தெளிவாகத் தெரியும். இந்த அடிப்படை வன்மை குணத்தை பொய்யாகப் பதிவு செய்யப்படும் அனைத்து IPC498A, வரதட்சணை கேசுகளிலும் காணலாம். அந்த புகார்களிலெல்லாம் கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவர் மீதும் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களை சிறையிலடைக்க வேண்டும், கணவரின் குடும்பத்திலுள்ள அனைவரது வாழ்க்கையையும் சிதைக்கவேண்டும் என்ற வன்குணத்தைக் காணலாம். அதாவது தனக்கு தன் கணவருடன் நன்றாக வாழத் தெரியவில்லை என்றால் தன் இயலாமையை ஏற்க மறுக்கும் அந்த வன்மை குணம் படைத்த பெண் தனது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தும் ஆயுதம் தான் தற்போதைய பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்கள் அந்த சட்டத்தைப் பயன்படுத்த விடப்படுவதில்லை. அதற்குக் காரணம் இது போன்ற வன்குணம் படைத்த பெண்கள்தான். இந்த அரக்கிகளின் கூட்டத்திலிருந்து உண்மையான அப்பாவிப் பெண்களை காப்பாற்றப்போவது யாரோ?
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
1 comment:
இதொ கள்ளக்காதலில் ஒரு பெண் காவலர் கொலை... ஒழுக்கமற்ற உறவுகளினால் உயிர்பலி.
படித்துப்பாருங்கள் இந்த கன்றாவிக்கூத்தை (தினமலரில் வெளியான செய்தி)
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5526
மற்றும் அந்த செய்திக்கு அருமையான பின்னுட்டம் மிட்ட ஒரு சகோதரியின் கருத்து!
இந்த பெண், முதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார் (கொடுத்து வைத்தவன்!). காதலித்து (?) திருமணம் செய்த இரண்டாவது கணவருக்கும் துரோகம் இழைத்துள்ளார். ஆயுள்தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது மட்டுமன்றி, அவரைப்பற்றி அரசுக்கும் தகவல் தராமல், தான் வகிக்கும் சட்டத்தைக் காக்க வேண்டிய ''காவல்துறை''க்கும் துரோகம் இழைத்துள்ளார். மற்றொரு பெண்ணின் கணவரைக் கைக்குள் வைத்திருந்ததனால், அப்பெண்ணிற்கும் துரோகம் இழைத்துள்ளார். எனவே இவருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளது. ஆனால், இவரை காதலித்து மணந்த இரண்டாவது கணவரும், அவரது குழந்தையும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.
by R.P. Seema,India 11/5/2009 6:09:52 AM IST
Post a Comment