மாமியார்கள் மோகினிப் பிசாசுகளா?
தினமலர் - வாரமலரில் வந்துள்ள கட்டுரை: November 8, 2009
"நாங்கள் என்ன மோகினிப் பிசாசுகளா... வீட்டுக்கு வரும் மரு மகளிடம் வரதட்சணை பணம் பிடுங்குகிறோமா... அவளை அடித்து நொறுக்குகிறோமா... யாரோ ஒரு சிலரை வைத்து எல்லா மாமியார்களும் அப் படித்தான் என்று முத்திரை குத்துவதா?'
— இப்படி கொதித்துப் போயுள்ள மாமியார்கள், இப்போது முதன் முறை யாக அகில இந்திய அளவில் சங்கம் அமைத்து விட்டனர்.
இந்த சங்கத்துக்கு, "ஆல் இண்டியா மதர் இன் லா ப்ரொடக்ஷன் போரம்' என்று பெயர் வைத்துள்ளனர். இதன் தலைமையகம் பெங்களூரூ நகரில் செயல்படுகிறது. டில்லி, மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் இருந்தும் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த மாதம் ஆறாம் தேதி இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, பெங்களூரூ நகரை சேர்ந்த 50 மாமியார்கள் மட்டும் உறுப்பினராக சேர்ந்தனர்; இப்போது பல நகரங்களில் இருந்தும் 10 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.
சங்கத்தின் கோரிக்கைகள் தான் என்ன...
* எல்லா மாமியார்களையும் கெட்டவள் என்று முத்திரை குத்தக்கூடாது.
* மாமியார் மீது குறை சொல்லி மருமகள் புகார் செய்தால், உடனே மாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போல, மருமகள் மீது மாமியார் தரும் புகார் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும்.
* மாமியார்கள் மீது அவதூறு கிளப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வயதான மாமியார்களை துன்புறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.
* மாமியார் சொத்துக்களுக்கு சட்டப்படி பாது காப்பு வேண்டும்.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நீனா துலியா, இந்த சங்கம் பற்றி கூறியதாவது:
எல்லா மருமகள்களும் கெட்டவர்கள் அல்ல; அதுபோல, எல்லா மாமியார்களும் கெட்டவர்கள் அல்ல; இதை, இந்த சமுதாயம் உணர வேண்டும். எங்களை மட்டும் மருமகள்களை கொல்ல வந்த மோகினிப்பிசாசு போலவும், பணம் பிடுங்கும் கொள்ளைக்காரி போலவும் சித்தரிப்பதை தடுக்க வேண்டும்.
மாமியார் என்றால், பொல்லாதவள் என்ற தவறான முத்திரையை உடைத்தெறிய வேண் டும். இதற்கு அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும். மாமியார்களின் குறையை நேரில் கேட்டு அதை களைய வேண்டும். இதற்காக நாங்கள் மத்திய அரசுக்கு மனு செய்ய உள்ளோம்.
இப்போதைக்கு நாங்கள் போராட்டங்கள் நடந்த தயாரில்லை; ஆனால், மாமியார்கள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தவும், மருமகள்களுடன் ஒற்றுமையை காக்கவும் பிரசாரம் செய்ய திட்டமிட் டுள்ளோம். சமீபத்தில் பெங்களூரூ நகரில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். விரைவில் மற்ற நகரங் களில் நடத்த உள்ளோம்.
போலீஸ் முதல் எங்கு போனாலும், மருமகள்கள் புகார்களுக்கு தான் முக்கியத்துவம் தந்து கவனிக்கின்றனர். பிள்ளையை பெற்று, வளர்த்து ஆளாக்கிய வயதான மாமியார்களது குறைகளை கேட்பதே இல்லை.
தேசிய மகளிர் கமிஷன் என்பது எல்லா பெண்களுக்கும் சமமானது தான்; ஆனால், அங்கும் கூட, எங்கள் புகார்களை கண்டுகொள்வதில்லை; மருமகள்கள் புகார்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. "டிவி' சீரியலாகட்டும், சினிமாவாகட்டும், மாமியார் என்றால், வில்லியாகத்தான் சித்தரிக்கின்றனர்; அதுபோல, நாவல்கள், கட்டுரைகள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகளில் கூட, மாமியார்கள் வேண்டாதவர்கள் போல விமர்சிக் கப்படுகின்றனர்.
இந்த நிலைமையை மாற்றுவது தான் எங்கள் குறிக்கோள்; அத்துடன், மருமகள்களை பாதுகாக் கும் அம்மாவாக நாங்கள் இருக்கிறோம் என் பதையும் நிரூபித்துக் காட்டுவோம்... என்கிறார் நீனா.
பெங்களூரூ நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் இவர்; கணவர், தேயிலை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பெங்களூரூ நகரில் உள்ள அலுவலகத்தில், வாரம் ஒரு முறை மாமியார்கள் கூடி விவாதிக்கின்றனர். சென்னை உட்பட பல நகரங்களுக்கு சென்று கூட்டங்களை நடத்தவும் மாமியார் சங்கம் திட்டமிட்டுள்ளது.
* * *
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
1 comment:
மாமியார் மெச்சிய மருமகளும் உண்டு. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்று உணர்ந்து நடக்கும் மாமியார்களும் உண்டு. இன்று பெண்/மாப்பிள்ளைக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது போய், மாமியார்/ம்ருமகள் பொருத்தம் பாருங்கள் என்று சொல்லுமளவில் இருக்கிறது.
Post a Comment