இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, November 25, 2009

ஆளையே கொல்லுதே

தினமலரில் வெளியான நாட்டில் உள்ள உண்மை நிலவரத்தை படம் பிடித்துக் காட்டும் கதை. பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று தெளிவாக படம் பிடித்துக் காட்டும் வித்தியாசமான கதை. இது போன்ற பெண்கள் தான் பெரும்பாலும் தவறான சட்டங்களுக்கு ஆதரவாக கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் = அதாவது தவறான பெண்களை பாதுகாக்கும் சட்டமோ என எண்ணத் தோன்றுகிறது.

அழகோ அள்ளுதே... ஆளையே கொல்லுதே

நவம்பர் 22,2009

வேணி - அழகான இளம்பெண், எந்த ஒரு ஆணையும், மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் கவர்ச்சிகரமான அழகு. அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், அவளது கணவன் ரமேஷ் ஓரளவுக்கு ஓகே. பொருத்தமான ஜோடி என பாராட்டத் தோன்றும். ரமேசுக்கு சொந்த வியாபாரம், பணபுழக்கம் ஏராளம்; வசதிக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு வேணி, பெற்றோர்க்கு ஒரே பெண். திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும், ரமேஷ் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த குறையை தவிர வேறு எதுவும் இல்லை.


ரமேசின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் குமார். தனியார் கம்பெனியில் குமாஸ்தா வேலை. வசதி குறைவாக இருந்தாலும், கலகலப்பாக பேசி பழகும் அவனது மனோபாவம் யாரையும் எளிதில் கவர்ந்து விடும். ரமேசின் குடும்பத்தையும் அவன் எளிதில் கவர்ந்ததில் ஆச்சார்யமில்லை. ரமேஷ் வீட்டில் இருக் கும் நேரத்தில், அடிக்கடி வந்து பழக்கம் ஏற்படுத்திக் கொண்டான் குமார். அவர்களுக்கு தேவையான பொருட் களை உடனடியாக கடைக்கு சென்று வாங்கி தந்து, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். நாளாக, நாளாக அந்த நெருக்கம் அதிகமாகி, வீட்டில் ரமேஷ் இல்லாத நேரத்திலும் குமார் வந்து செல்லும் போக்கு அதிகமானது. அந்த வட்டாரத்தில் குமாரின் நடத்தையை பற்றி நல்லவிதமாக பேசப்படுவதால், யாரும் குமாரை சந்தேகமாக நினைக்கவில்லை.

அன்று காலை வேணியின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. வீட்டுக்குள் சென்ற குமாரிடம் மளிகை "லிஸ்ட்' ஒன்றை கொடுத்தாள் வேணி.
"
அவர் வருவதற்கு இரண்டு நாள் ஆகுமாம்... வீட்டில் ஒரு பொட்டு மளிகை சாமான் இல்லே... வாங்கி வந்துதான் சமையல் பண்ணனும்... பிளீஸ்,'' என்றாள்.
"
இதே ஐந்து நிமிடத்தில் வாங்கிட்டு வந்துறேன்,'' என்று கிளம்பினான் குமார். வாங்கி வந்த மளிகை பொருட்களை இருவரும் சேர்ந்து, வீட்டில் அதற்குரிய இடத்தில் அடுக்கி வைத்தனர்.

பொருட்களை அடுக்கும் சாக்கில் வேணி தேவையில்லாமல், குமாருக்கு அருகில் வந்து நிற்பதை குமாரால் யூகிக்க முடிந்தது. விலகி, விலகி சென்றவனை ஒரு கட்டத்தில் வேணி தடுத்து நிறுத்தி கேட்டாள்
""
என் மேலே ஆசையில்லையா?'' - ஏக்கத்தோடு கேட்டாள்
ஒரு சில வினாடி ஆடிப்போன குமார் சுதாரித்துக் கொண்டு, ""அப்படி எல்லாம் இல்லே,'' என்று நெளிந்தான். "அப்புறம் எப்படியாம்?'' என்று கொஞ்சிய வேணி, மேலும் நெருங்கி வர குமாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்து ஒரு சில நிமிடங்களில் "எல்லாம்' நடந்து முடிந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோடு வீட்டுக்கு வராமால் இருந்தான் குமார். அவளை ஏறிட்டு பார்ப்பதைக் கூட தவிர்த்தான்.


அன்று அதிகாலை வீட்டிலிருந்து எழுந்த குமார் வெளியில் செல்ல புறப்பட்டான். எதிர் வீட்டில் இருந்து ரமேஷ் குரல் கேட்டது.""என்னப்பா... கூப்பிட்டாக் கூட கண்டுக்க மாட்டேங்கிற... நானும், வேணியும் வெளியே போறோம்... நீயும் வர்றே... டிரைவரா,'' என விஷயம் புரியாமல் ஆர்டர் போட்டான். எல்லாம் அவள் ஏற்பாடாக தான் இருக்கும் என்பதை உணர்ந்த குமார் பதில் சொல்வதற்குள், ""சரிசரி... சீக்கிரம் புறப்படு,'' என்று கூறிச் சென்றான் ரமேஷ்.


அன்று நடந்த சம்பவத்தின் குற்ற உணர்ச்சி குமாரின் மனதை "பிளேடு' கொண்டு அறுத்தது. "எவ்வளவு நாட்கள் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். உண்ட வீட்டுக்கே துரோகம் செய்து விட்டோமே. அந்தப் பொண்ணுதான் கூப்பிட்டாலும், நமக்கு எங்கே புத்தி போச்சு' என்று தன்னை தானே நொந்து கொண்டவன், "தான் வரவில்லை' என் பதை கூற, ரமேஷ் வீட்டுக்குள் சென்றான் குமார்.


நமட்டுச் சிரிப்புடன் குமாரை வரவேற்ற வேணி, பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருந்த ரமேசுக்கு, குமார் வந்துள்ள தகவலை சொன்னாள். ""ஹாலில் வெயிட் பண்ணச் சொல்லு... வந்தறேன்...'' என்று குரல் கொடுத்தான் ரமேஷ். ஹாலில் அமர்ந்த குமாரிடம், "என்ன... இந்தப் பக்கம் ஆளையே காணோம்'' என்றாள் வேணி. அதற்கு குமாரிடம் எவ்வித பதிலும் வரவில்லை. குளித்து முடித்து ரமேஷ் வந்த பின், குமாரின் பதிலை ஏற்காமல், அவனை கட்டாயப்படுத்தி தன்னுடன் அழைத்து சென்றான் ரமேஷ்.

வெளியே சென்ற இடத் தில் குமார் ஒதுங்கியே இருந்தான். ஆனால், வேணி, அவனது அப்பாவித்தனத்தை சாதகமாக்கி, மிரட்டினாள். "அவர் இன்னும் ஒரு வாரத்தில் வெளியூர் போயிடுவார். மீண்டும் வரணும்.. இல்லேனா... நீ என் கைய புடிச்சு இழுத்தேன்னு ஊரைக் கூட்டி மானத்தை வாங்கிருவேன்,'' என்று மிரட்டினாள். "இப்படி போட்டாத்தான் இவன் வழிக்கு வருவான்' என்று மனதிற்குள் சிரித்தாள் வேணி.


அப்பா இல்லாத குடும்பம், இரண்டு தங்கைகள் என, பழியை நினைத்து பயந்தான் குமார். வேணி சொன்னதுபோல ஒரு வாரத்தில் மீண்டும் வெளியூர் கிளம்பினான் ரமேஷ். மிரட்டலுக்கு பயந்து, பகல் நேரத்தில் குமார், வேணி வீட்டுக்கு சென்று வந்தான், எந்த பிரச்னையும் இல்லாமல்.


அன்று... பகலில் முடியாமல் போனதால், இரவில் தங்கும்படி வேணி சொல்ல, மறுத்தான் குமார். வழக்கம் போல இறுதியில் வேணியின் பேச்சு வென்றது. இரவு வேணியின் வீட்டுக்குள் நுழைந்தான், குமார். கட்டிலில் இருவரும் சாய்ந்த சிறிது நேரத்தில் வெளியே "காலிங் பெல்' ஓசை கேட்டு வேணி திடுக்கிட்டாள். ஜன்னல் வழியாக பார்த்த போது, கணவன் வெளியே நிற்பது தெரிந்தது. சர்வமும் நடுங்கிப் போனாள் வேணி. குமாரை கட்டிலுக்கு அடியில் மறைந்து கொள்ள சொன்னாள்.


"
போன வேலை சீக்கிரமா முடிச்சுருச்சு... அதான் திரும்பிட்டேன்... இன்னும் தூங்கலியா... பெல் அடிச்ச உடனேயே எழுந்திட்டே'' என்றான், ஆச்சரியத்தோடு. "தூக்கம் வரல...'' என்றாள் வேணி. "அவசர அவசரமா கிளம்பி வந்ததுல ரொம்ப டயர்டா இருக்கு,'' என்று படுக்கையில் விழுந்தான் ரமேஷ், சிறிது நேரத்தில் குறட்டை விட துவங்கினான். சுமார் 1 மணி நேரம் வரை பொறுத்த வேணி, ரமேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அறிந்து, கட்டிலுக்கு அடியில் இருந்த குமாரை மெல்ல அழைத் தாள். வெளியே வந்த குமார், வீட்டை விட்டு வெளியேற முயன்றான். அவனை தடுத்து நிறுத்திய வேணி, அவனை பக்கத்து அறைக்கு கட்டாயப்படுத்தி, அழைத்து சென்றாள்; பயமின்றி நடந்து கொண்டாள்.


எதேச்சையாக விழித்த ரமேஷ், அருகில் மனைவி இல்லை என்று தெரிந்து கொண்டு, பாத்ரூமை பார்த்தாள். விளக்கொளி இல்லை; மெல்ல எழுந்து பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தான்.


"
அடிப்பாவி... நான் வீட்டில் இருக்கும் போதே... எனக்கு துரோகம் செய்றீயா?'' என்று கத்தினான். பின்னர் விளக்கு வெளிச்சத்தில் மனைவியுடன் இருப்பவன் குமார் என்று தெரிந்ததும், ஆவேசத்தில் அவனை தாக்க முயன்றான்.


உஷாரான வேணி, யாரும் எதிர்பாராத வகையில், உடனடியாக சம்பவத்தையே திருப்பினாள். "அய்யோ... நான் மோசம் போயிட்டேங்க... நீங்கதான் எங்கூட இருக்கீங் கன்னு நம்பி... அவனோட படுத்துட்டேன்,'' என அழுது புரள ஆரம்பித்தாள்.


கணவனை மேலும் நம்பச் செய்ய, நம்ம இரண்டு பேரையும் ஏமாத்திய இந்த நாயை சும்மா விடக் கூடாது என்று வெளியே வைத்திருந்த இரும்பு "ராடை' எடுத்து, கணவன் கண் எதிரே குமாரின் தலையில் தாக்கினாள் வேணி. இதை சற்றும் எதிர்பாராத குமார், அதே இடத்தில் உயிரிழந்தான்.


இச்சம்பவத்துக்கு பிறகு வேணி, ரமேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அருகில் வந்து படுத்தாலும் கணவனுக்கும், இன்னொரு நபருக்கும் வித்தியாசம் தெரியாமல் போகுமா என்று வழக்கின் சுவராசியம் குறித்து பத்திரிக்கைகள் பலவாறாக எழுதின. இறுதியில் வேணி, ரமேசுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்த வெளிவந்த பின்னரும் வேணியின் மனசாட்சி, அவளை உறுத்திக் கொண்டுதான் உள்ளது. வேணி இன்றும் வாழ்கிறாள் வெறும் நடைபிணமாக!

************************************
முழுக்கதையை இங்கே சென்று படித்துப் பாருங்கள் : சொல்ல மறந்த கதை





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.