சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 19, 2009

திருமணத்தால் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல கடவுளும் தான்!

கடலூர், நவ. 18:
கடலூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்துகொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் புனித வளனார் கல்லூரிச் சாலையில் பத்திரப் பதிவாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ வினைதீர்த்த விநாயகர் கோயில். இங்கு ஏராளமாகத் திருமணங்கள் நடப்பதால், கல்யாண விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் பெரும்பாலான நாள்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அருகில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, இந்த விநாயகர் கோயிலுக்கு வந்து மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு வழிபடுவதை பலர் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

முறைப்படி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடந்து இருப்பதாக கோயில் குருக்கள் தெரிவித்தார். அதேபோல் பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்ள இங்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. காதல் திருமணம் செய்துகொள்ள இக்கோயிலுக்கு வந்து, பெற்றோரும் பின்தொடர்ந்து வந்து, திருமணம் முடிந்ததைப் பார்த்து ஏமாற்றத்துடன் கண்ணீர் விடும் நிகழ்ச்சிகளும், மாறாக அடிதடியில் இறங்கிய நிகழ்ச்சிகளும் இங்கு சர்வ சாதாரணம்.


இவ்வாறு காதல் திருமணத்தை நடத்தியதன் விளைவாக, பின்னர் போலீஸ் விசாரணையில் குருக்களும் கோயில் நிர்வாகிகளும் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. எனவே இனி இங்கு, காதல் திருமணங்களை அனுமதிப்பது இல்லை என்ற முடிவுக்குக் கோயில் நிர்வாகம் வந்துள்ளது.
பெற்றோர்களுடன் வந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்குத் தடையேதும் இல்லை என்றும் கோயில் குருக்கள் தெரிவித்தார்.


எனவே கோயிலின் முன்புறம் இதுகுறித்த அறிவிப்பையும் கோயில் நிர்வாகம் வைத்துள்ளது. "இங்கு திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. மீறித் திருமணம் செய்தால் நிர்வாகம் பொறுப்பு அல்ல' என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

======================
தற்போது செய்தித்தாள்களில் தினமும் வரும் காதல் செய்திகளின் தாக்கம் இது தான். இந்தகாலத்துப் பெண்களின் பெற்றோர்கள் தனது பெண் செய்யும் தவறை மறைப்பதற்காக மாப்பிள்ளையுடன் சேர்த்து கோயில் குருக்கள், கோயிலில் இருக்கும் கடவுள் இவர்கள் மீதும் தங்களது பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்யவும், வரதட்சணை வாங்க
உடந்தையாக இருந்ததாகவும் வரதட்சணை கேஸ், 498A போன்றவற்றை பதிவுசெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இதைப்போன்ற புகார்களை கேட்டு பரிதாபப்படவும், கேசுகளை பதிவுசெய்யவும் சில ஆட்கள் இருக்கிறார்கள். கேட்பவன் "கே"வாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் புகாரில் எழுதித்தரலாம்.

மனிதர்களின் வாழ்வை சிதைக்கும் முறையற்ற திருமணங்கள் கடைசியில் கடவுளையும் ஒரு கைபார்த்துவிட்டன. என்ன கொடுமையடா சாமி!
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.