இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, September 07, 2009

கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"

ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்
செப்டம்பர் 08,2009, Dinamalar News

English Version: IPS officer’s wife complains to cops

சென்னை : வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். ஐ.பி.எஸ்., அதிகாரியான என் கணவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசிக்கிறார் எம்.பி.ஏ., பட்டதாரி சர்மிளா. சென்னையில், கரூர் வைசியா வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்க்கிறார்.

அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் கணவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல். ஜம்மு - காஷ்மீர் ஒதுக்கீடு ஐ.பி.எஸ்., அதிகாரி. ஜம்முவில் 13வது பட்டாலியன் கமாண் டன்டாக பணியாற்றி வருகிறார்.அவர், கிறிஸ்தவ யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் சுயமரியாதை திருமணமாக, இந் தாண்டு பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடந்தது.சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில், எங்கள் முதல் இரவு நடந்தது. ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் குடிபோதையில் வந்த சாமுவேல், என்னையும், என் குடும்பத்தாரையும், ஆபாசமாகவும், கேவலமாகவும் பேசி, "டார்ச்சர்' செய்தார்.

கணவருடன், பிப்ரவரி 14ம் தேதி, டில்லி வழியாக காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கமாகப் பேசி, அடித்து சித்ரவதை செய்தார்.என் கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டேன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ள அவர், என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது. சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார்.என் கணவர் சாமுவேல், மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார். கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டுள்ளார். காய்ச்சல், குளிர் ஜுரத்தில் படுத்தேன். மருத்துவ சிகிச்சை பெறக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமை படுத்தினார்.

இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பி விட்டேன். என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார். மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை கமிஜனர் ஆசியம்மாளிடம், இந்த புகாரை சர்மிளா அளித்தார். அவர் மனு, குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனைவிக்கு கள்ளத்தொடர்பால் விவாகரத்து முடிவு : ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் வாக்குமூலம்:

சர்மிளா புகார் கொடுத்த தகவல் அறிந்து வந்த சாமுவேல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாவது:

எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு வெறொருவருடன் தொடர்புள்ளது. அதை மறைக்கத்தான் இப்படி என் மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார்.மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.



3 comments:

தமிழ். சரவணன் said...

கொஞ்ச நாள் பத்திரிக்கயைில் வரதட்சணை கொடுமை நீயுசுக்கு லீவு விட்டிருந்தாங்க... இப்போ மறுபடியும் பல செய்திகள்...

1. ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்

http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4887

2. மனைவியின் ஆபாச படங்களை காட்டி மிரட்டல்: கணவர் மீது புகார்

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12653

தமிழ். சரவணன் said...

இதொ திருநெல்வெலியில் ஒர பெண்ணின் அரிய சா(வே)தனை - 15 ஆண்களை ஏமாற்றி மணந்தவர்... படியுங்கள் இந்தச்செய்தியை....


http://thatstamil.oneindia.in/news/2009/09/06/tn-woman-arrested-for-marrying-15-youths.html

தமிழ். சரவணன் said...

//இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும்.//

இதுபோல் வாய்ப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றதா... மிரட்டி பிச்சையெடுத்துப்பிழைக்கும் அல்லக்கை கட்டபஞ்சாயத்து கூலிகளும் காவல் துறையில் உள்ள கறுப்பு அடுகளாலும் மிரட்டப்பட்டு சில நடத்தை சரியில்லாத பெண்களோடு வாழுமாறு மிரட்டப்படுகின்றனர்...

என்னடைய வழக்கில் என்னுடைய நண்பர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தால் உள்ள சில மிருகங்களினால் கடுமையக தாக்கப்பட்டார்.. இவரை தாக்கிய காரணம் இவர் என் மனைவியன் வாழ்க்கையை (??) கெடுக்கின்றாராம்... இதற்க்குப்பிறகு என் திருமணத்திற்க்கு வந்த பாவத்திற்காக என் தம்பி நண்பருடைய தாயரும் (இவரும் வரதட்சணை கேட்டு எனது மனைவியை(??) கொடுமைப்படுத்தினாராம்) கைது செய்யப்பட்டு 5 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்...

நம் நாட்டில் காசு உள்ளவனுக்கும், மிரட்டி பிச்சைஎடுத்து பிழைக்கும் பொறுக்கிகளுக்கும், துஷ்பிரோயகம் செய்து பிழைக்கும் அதிகாரிகளுக்குத்தான் சட்டம் எல்லாம்... யாராவது ஏமாந்தவன் கிடைத்தால் எதிர் கேள்வி கேட்டால் அடி உதைதான்...

தொடரட்டும் இதுபோல் கூத்துக்கள்...

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.