சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 24, 2009

குடும்ப வன்முறை

அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள்: சமூகநலத்துறை அலுவலகங்கள் திணறல்

செப்டம்பர் 25,2009

குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதால், சமூக நலத்துறை அலுவலகங்கள், "கவுன்சிலிங்' நடத்த முடியாமல் திணறி வருகின்றன. மாவட்ட சமூக நல அலுவலரே, அந்தந்த மாவட்டங்களில் குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையில், குடும்ப வன்முறை தொடர்பாக வரும் மனுக்களை, கவுன்சில் குழு விசாரித்து வருகிறது. கவுன்சிலிங்கிற்கு உட்படாத மனுக்களை மட்டும்,போலீசாருக்கு பரிந்துரை செய்வர். கடந்த சில மாதங்களாக, அனைத்து மாவட்டங்களிலும், குடும்ப வன்முறை குறித்த மனுக்கள் அதிகம் வருவதால், வாரம் முழுக்க கவுன்சிலிங் நடத்தியும் மனுக்கள் குறையவில்லை. குடும்ப வன்முறையில் பெரும்பாலும் பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால், அதிகநாள் கிடப்பில் போடவும் முடியாது. (ஆண்கள் பாதிக்கப்பட்டால் கிடப்பில் போட்டு விடுவார்கள்)இதனால், தேங்கி வரும் மனுக்களை விரைந்து முடிக்க என்ன செய்வது என, மாவட்ட சமூகநல அலுவலர்கள் திணறி வருகின்றனர்.

=====================

குடும்ப வன்முறை அதிகரித்து வருவதற்கு காரணமென்ன? நடுநிலையற்ற சட்டங்கள். ஒரு பாலினத்திற்கு எதிராக அதிக சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட பாதிப்பு. பெண்கள் சட்ட உதவியுடன் வன்முறையில் இறங்கிவிட்டதால் இன்று வன்முறை அதிகரித்து விட்டது.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.