இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, September 09, 2009

(மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம்!

ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான புகார்: அடக்கி வாசிக்க போலீசார் முடிவு

Dinamalar News: செப்டம்பர் 10,2009
இது தொடர்பான முந்தைய செய்தியை இங்கே காணலாம்: கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"


ஐ.பி.எஸ்., அதிகாரிக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை, ஜம்மு-காஷ்மீரில் நடந்துள்ளது. அதனால், மனைவியை துன்புறுத்தியதாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் பெண் சர்மிளா. இவரும் காஷ்மீரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சாமுவேலுவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கொஞ்ச நாட்கள் ராமநாதபுரத்திலும், மதுரையிலும் தங்கிருந்த அவர்கள், பிறகு சென்னைக்கு வந்து ஓட்டலில் தங்கியுள்ளனர். அதன்பின் காஷ்மீர் சென்றுள்ளனர். சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்த சர்மிளா , "சென்னையில் தங்கியிருந்தபோது, எனது கணவர் கொடுமைப்படுத்தினார்' என, தெரிவித்திருந்தார்.

உடன் ஜம்முவில் இருந்து சென்னை வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், தன் விளக்கத்தை வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசில் அளித்தார். இதிலிருந்தே, சாமுவேலும், சர்மிளாவும் பல இடங்களில் தங்கியிருந்துள்ளது தெரிகிறது. அப்படியானால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதை ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு அனுப்ப வேண்டும். ஜம்முவிலும் அவர்களுக்குள் பிரச்னை நடந்துள்ளது. இப்பிரச்னைக்கு கிடையே, "எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது' என அறிவிக்க கோரி, சென்னை கோர்ட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் மனு தாக்கல் செய்தார்.

ஜம்முவில் இருந்து சாமுவேல், மனைவி புகாரால் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே போல், மனைவி மீதான விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜம்முவில் வழக்கு தொடர்ந்தால், சென்னையில் உள்ள சர்மிளா, அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்தில் அணுகி தீர்வு காண, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்தால், அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான விவகாரத்தை தற்போதைக்கு சென்னை போலீசார் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.

=========================

நாடு விட்டு நாடு போய் நடக்காத சம்பவங்களை நடந்ததாக பொய் புகார் கொடுக்கும் போது கேசு பதிவு செய்து அப்பாவி கணவரின் குடும்பத்தாரை கூட்டமாக கைது செய்யும் போதும், வெளிநாட்டில் இருப்பவர்களை கேசுகளில் சிக்க வைக்கும் போது ஒரு துளி கூட இது போல சிந்திப்பதில்லையே?

பலமிருந்தால் (மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம். என்ன "பலம்" என்று உங்களுக்குத் தெரியும்!


2 comments:

தமிழ். சரவணன் said...

இதொ இன்னொரு செய்தி...

இந்த வாரம் வரதட்சணை செய்திகள் வாரம்...

http://www.dinamalar.com/new/court_detail.asp?news_id=3960

குறிபிட்டுள்ள செய்தில் எந்தளவிற்கு உண்மை என்பதை அந்த நிகழ்வு நடந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்...

மற்றும் தற்பொழுது சர்வசாதரணமாக வரதட்சணை கொடுமை சட்டம் பயன்படுத்தப்படுகின்றது...
இந்த சட்டத்தால் இது வரைக்கும் நாட்டில் சுமார் 1,30,000 ஆயிரம் பெண்கள் மட்டும் (மாமியார் நாத்தனார்கள் மற்றும் உறவினர்கள்) விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... (எனது தாயர் மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட).. ஒரு பெண் (கொஞ்சம் வசதி படைத்தவர் ஆள் பலம் மிக்கவர் என்றார் இவர்கள் போடும் ஆட்டம் கேட்கவே வேண்டாம்) ஒரு புகாரில் எத்தனை பெயரை வேண்டுமானலூம் மற்றும் என்ன வேண்டுமானலூம் எழுதிக்கொடுக்கலம்... அதில் உள்ள அத்தனை பெயரையும் எந்த ஒரு விசாரணையின்று கைது செய்து சிறையில் அடைக்கலாம் (மும்பையில் நடந்த உலக சாதனையா இதுபோல் வழக்கில் 2மாத பச்சிளம் குழந்தைக்கு முன் ஜாமின் வழங்கியது தாங்கள் அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கின்றேன்). மற்றும் இது போல் வழக்குகளினால் ஆண்டொன்றுக்கு சுமார் 20.000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)

இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தங்களுக்கு இத்தகவலை தெருவிக்க விரும்புகின்றேன்

நன்றி,

தமிழ். சரவணன்

தமிழ். சரவணன் said...

//பலமிருந்தால் (மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம். என்ன "பலம்" என்று உங்களுக்குத் தெரியும்!//

ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் pro "பலம்" தான்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.