இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 24, 2009

குரங்கு கையில் கொடுத்த பூமாலை

சுயஉதவி குழு உறுப்பினர் பெயரில் ரூ. 2 லட்சம் கடன் மோசடி: சேவா சங்க தலைவி கைது

செப்டம்பர் 25,2009

விருதுநகர்: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில், பாங்கில், இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த, சேவா சங்க தலைவி கைது செய்யப்பட்டார். மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்களை, சமீப காலமாக, தலைவர்களாக இருப்பவர்கள் ஏமாற்றி பண மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.

இதற்கு காரணம், மகளிர் சங்க தலைவவிகளாக இருப்பவர்கள் மட்டுமே, வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும், தலைவிகள் கைவசம் மட்டுமே உள்ளது. மேலும், உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களில்லை. பாங்குகள் கடன் மட்டுமே வழங்குகின்றன. கடன் தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தால் மட்டுமே வழங்க வேண்டும். கடன் தொகைக்கான தீர்மானம் போடும் போது தலைவர், செயலர், பொருளாளர் கையெழுத்திட வேண்டும். பாங்கில் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீர்மானம் போட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது. இதனால், ஆள் மாறாட்டம் செய்து மற்றவர்கள் கடன்தொகையை பெற்று விடுகின்றனர். பெரும்பான்மையான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடன் வாங்காமலே கடனாளி ஆகின்றனர். விருதுநகர், திருச்சுழி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் தனசேகரன். இவர் மனைவி பாக்கியலட்சுமி சேவா சங்க தலைவராக உள்ளார்.

ஆணைக்குளம் மகளிர் சுய உதவிக்குழு, அன்னை ரோஜா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், கடன் வாங்கி தருவதாக, திருச்சுழி ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்றார். இவர்களது பெயரில், இரண்டு லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, உறுப்பினர்களுக்கு வழங்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து, ஆணைக்குளத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி பேச்சியம்மாள் மற்றும் ஒன்பது பேர், போலீசில் புகார் செய்தனர். விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாக்கியலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

==========================

இப்படித்தான் மகளிருக்காக கொண்டுவரப்படும் அனைத்து நல்ல திட்டங்களும் குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல அதன் தலைவிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். வரதட்சணை மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களும் இப்படித்தான் நகரங்களில் வாழும் மேல்தட்டு வர்க்க பெண்களால் தவறாகப்பயன்படுத்தப்படுகிறது. உண்மையான அப்பாவி பெண்கள் இந்த சட்டங்களை ஒருபோதும் பயன்படுத்த முடியாமல் நீதிமன்றங்கள் பொய் கேசுகளால் நிரம்பி வழிகின்றன.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.