காவல் துறையில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு!
சில நாட்களுக்கு முன் வந்த மற்றொரு செய்தி
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்
=================================
இப்போது வந்துள்ள செய்தி
மதுரை இன்ஸ்பெக்டர் மீது மனைவி புகார்
செப்டம்பர் 20,2009
சேலம்: "வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரை இன்ஸ்பெக்டர் மீது, மனைவி புகார் கூறியுள்ளார். சேலம் கல்லூரி பேராசிரியை சாந்தி, போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
எனக்கும், சரவணரவி(43) என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு தீரஜ்(8) என்ற மகன் உள்ளான். திருமணத்தின் போது, 50 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை கொடுக்கப்பட்டது (என்ன ஆச்சரியம் வரதட்சணை என்ற வார்த்தைக்கு பதிலாக சீர்வரிசை என்று எழுதப்பட்டுள்ளதே!). திருமணமான போது, சரவணரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, சங்ககிரி, ஏற்காடு, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில், நான் பேராசிரியையாக பணியாற்றுகிறேன்.
ஐந்து ஆண்டு கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், சரவணரவிக்கு பெண்கள் பலருடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. அதை தட்டிக் கேட்ட போது, அடித்து உதைத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தீரஜுக்கு ஜாதி சான்றிதழ் பெற முயற்சித்த போது, அவருடைய ஜாதி சான்றிதழை தர மறுத்துவிட்டார்.அவர் ஆவணத்தில், இசை வேளாளர் என்ற ஜாதியில் சான்றிதழ் பெறப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், இசைவேளாளர் பிரிவில் சான்றிதழ் பெற்று வேலையில் சேர்ந்துள்ளார். அதன் பின், என் சான்றிதழை கொண்டு, மகன் தீரஜுக்கு ஜாதி சான்றிதழ் பெற்றேன். ஏற்காட்டில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய போது, வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்தனர். இது பற்றி கேட்டபோது, என்னை விரட்டியடித்து விட்டனர். என்னுடைய 70 சவரன் நகை மாமனார், மாமியார் வசம் உள்ளது. தற்போது, மதுரை வணிக கூட்டுறவு புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டராக சரவணரவி பணியாற்றி வருகிறார். பலமுறை அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் முடியவில்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி கு...
10 years ago
No comments:
Post a Comment