சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, September 21, 2009

காதலால் வீழ்ந்தேன்!

குடும்பத்தினர் 7 பேரை விஷம் வைத்து கொன்ற இளம்பெண்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரம்!

ரோடக், செப்.20: ஹரியாணா மாநிலம் ரோடக் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் 7 பேரை விஷம் வைத்து கொன்ற இளம்பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலரையும் போலீஸôர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கபூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சோனம். அதே ஊரைச் சேர்ந்தவர் நவீன். இவர்கள் இருவரும் சில ஆண்டுளாக காதலித்து வந்தனர்.

இவர்கள் ஒரே சாதி உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே கோத்ரத்தை (ஒரே மாதிரியான சுபசடங்கு செய்பவர்கள்) என்பதாலும் இவர்களின் காதலுக்கு சோனத்தின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வந்தனர்.

இதுதொடர்பாக நீடித்த குடும்பப் பிரச்னைக்கு முடிவுகட்ட சோனம், கொடூர வழியை தேர்ந்தெடுத்தார். தனது காதலனை விஷம் வாங்கி வரச் செய்தார். அதை தான் சமைத்த உணவில் கலந்து குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை இரவு பரிமாறி உள்ளார்.

இந்த உணவை சாப்பிட்ட பெற்றோர், பாட்டி, சகோதரர் உள்ளிட்ட 7 பேர் அவரவர் படுக்கையில் இறந்து கிடந்தது கடந்த செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

அதேவேளையில் குளியலறையில் மயங்கி கிடந்தவாறு நாடகமாடிய சோனத்திடம் போலீஸôர், தீவிரமாக விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவல்கள் சில நாள் கழித்து தெரியவந்தன. இதையடுத்து சோனம், நவீன் ஆகியோர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.