இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 24, 2009

கொலைக்கு தூண்டிய மனைவி

கொலைக்கு தூண்டிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதனின் தம்பி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், "திடுக்' திருப்பமாக, அவரை கொலை செய்யத் தூண்டிய மனைவி, கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன், தற்போது ம.தி.மு.க.,வில் உள்ளார். அவரது தம்பி ராஜராஜன்(40), செப்.,21 இரவு அரியநாயகிபுரம் கரிசல் காட்டுப் பகுதியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மூன்று தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர். மனைவி, கள்ளக்காதலன் கைது: வழக்கில், "திடுக்' திருப்பமாக ராஜராஜனை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக, அதே ஊர் வாலிபர் ஷாஜகான்(24), அவரை கொலை செய்ய தூண்டியதாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரி(32) ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: ராஜராஜனும், ஷாஜகானும் பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர். ஷாஜகான், ராஜராஜன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஷாஜகானுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதமாக, ஷாஜகான் சென்னை கே.கே., நகரில் ஒரு கடையில் வேலைபார்த்தார். அப்போது அவர் கிருஷ்ணகுமாரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அடிக்கடி குடிபோதையில் வரும் கணவர், தன்னை அடித்து துன்புறுத்துவதாக கிருஷ்ணகுமாரி வருத்தப்பட்டார்.

இந்நிலையில், ரம்ஜானுக்காக விடுமுறையில் அரியநாயகிபுரம் வந்த ஷாஜகான், கிருஷ்ணகுமாரியை சந்தித்தார். அவரிடம், கொடுமைப்படுத்தும் தனது கணவரை கொலை செய்துவிடுமாறு கிருஷ்ணகுமாரி வலியுறுத்தினார். மது ஊற்றிக் கொடுத்து கொலை: அதையடுத்து சம்பவத்தன்று, ஏற்கனவே நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வந்த ராஜராஜனுக்கு, ஷாஜகான் மது ஊற்றிக் கொடுத்தார். ராஜராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, உருட்டுக்கட்டையால் அவரை அடித்து படுகொலை செய்தார். பின்னர் அதை கிருஷ்ணகுமாரியிடம் தெரிவித்தார்.

இவ்வாறு போலீசார் கூறினர். முதலில், கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, கிருஷ்ணகுமாரி நாடகமாடினார். போலீசார், "உரிய முறையில்' விசாரித்தபோது நடந்த சம்பவம் அனைத்தையும் விவரித்தார். கிருஷ்ணகுமாரி, அவரது கள்ளக்காதலன் ஷாஜகானை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையிலடைத்தனர்.

==========================

கொடுமைபடுத்தும் மனைவியிடமிருந்து விடுதலை பெற அப்பாவி கணவர்கள் பலர் வழி தெரியாமல் நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர் வீடுகளுக்கும் நடையாய் நடந்து கடைசிவரை நீதி கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பெண்களிடமிருந்து தான் வழிமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.