இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, September 08, 2009

ஆல் போல தழைத்துப் பெருகும் 498A வியாபாரம்

498A வியாபாரம் எத்தனை வியாபாரிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது பாருங்கள். தற்போது குடும்பங்களில் ஏற்படும் பிளவுகளுக்கு அடிப்படை காரணங்கள் வேறு. ஆனால், கல்லில் நார் உறித்து எல்லா விஷயத்திலேயும் காசு பார்த்துவிடுவார்கள்! எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் தான்.

ஒரு பக்கம் குடும்பங்களை அழிக்கும் IPC498A, DV, DP3 போன்ற பாரபட்சமான சட்டங்கள் மறு பக்கம் விவாகரத்து எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சுற்றுலா வியாபாரத்திட்டம். இரண்டு பக்கமும் வருமானம் தான்!

தனியாக சுற்றுலா சென்று வந்தவுடன், சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருக்கும் போது கணவன் வரதட்சணை கேட்டு கொலை செய்ய முயற்சித்தார் என்று பொய் 498A கேசு பதிவு செய்துவிடலாம். கணவனின் செலவிலேயே அவனுக்கு சமாதி கட்டி விடலாம். நல்ல திட்டம் தான்.

விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு சுற்றுலா திட்டம்
Dinamalar News:செப்டம்பர் 09,2009

மும்பை: விவாகரத்து கோரும் தம்பதிகளுக்காக சிறப்பு சுற்றுலா திட்டத்தை மும்பையை சேர்ந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இருந்த விவாகரத்து வழக்குகள் நம்நாட்டிலும் தற்போது அதிகரித்து விட்டன.

அதிகம் படித்த பெண்களும், அதிகம் சம்பளம் வாங்கும் பெண்களும் சுயமாக சிந்திக்க துவங்கி விட்டனர். இதன் காரணமாக தனித்து வாழும் தைரியம் அதிகரித்து விட்டது. எனவே, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. கூட்டு குடும்பத்தில் உள்ள பெண்கள் தனி குடித்தனத்துக்கு சம்மதிக்காத கணவனை விவாகரத்து செய்ய துணிகின்றனர். இதுபோன்ற தம்பதியரை ஒன்றிணைத்து ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை,விவாகரத்து வழக்கை கவனிக்கும் வக்கீல்களின் துணையோடு செயல்படுத்தி வருகின்றன.

மும்பையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனங்கள். மும்பையில் உள்ள கே.வி.டூர் அண்ட் டிராவல்ஸ் நிறுவன தலைவர் விஜேஷ் தாக்கர் குறிப்பிடுகையில், "விரக்தியின் விளிம்பில் உள்ள தம்பதிகளை தனிமையில் சந்தித்து உறவாட ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களது மணமுறிவை தடுக்கிறோம். உள்நாட்டில் உள்ள மலை வாசஸ்தலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ, தம்பதியர் விரும்பும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது' என்றார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.