இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 20, 2009

கட்சிகள் செய்யும் கலாட்டா

கணவருடன் சேர்த்து வைக்க போராடிய பெண் பச்சிளம் குழந்தையுடன் கைது
செப்டம்பர் 21,2009

நாகர்கோவில் : கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராட்டம் நடத்தி வந்த பெண்ணை, பச்சிளம் குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த கண்ணனுக்கும், இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரியான கோபிகா(23)வுக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோபிகா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கோபிகாவுக்கு குழந்தை பிறந்தது. கணருடன் பேசி சேர்ந்து வாழ விரும்பினார். ஆனால், கணவர் வீட்டார் விரும்பவில்லை.

கோபிகாவை அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை தே.மு.தி.க., அறிவித்தது. இதற்காக, கோபிகா தனது குழந்தையுடன் பாலப்பள்ளம் சென்றார். அங்கு வந்த போலீசார், கண்ணன் வீட்டில் யாரும் இல்லாததால், திரும்பி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து குழந்தையை ரோட்டில் படுக்க வைத்து கோபிகா போராட்டம் நடத்தினார். இதை தொடர்ந்து கோபிகாவை அவரது குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
=======================
இது போல பொய் வதட்சணை கேசுகளில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற இந்த கட்சிகள் உண்மையாகவே போராடுமா?

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.