புதுடில்லி: "பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்துயுள்ளது.அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வட மாநிலங்களில் நடைபெறும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் கொலைகளையும் தவிர்க்க முடியும்.பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன (பொய் 498A புகார்களை எழுதி பிறகு பதிவு செய்வதற்கே நேரம் போதவில்லையே). பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது (ஆண்களுக்கு எதிராக சட்டத்தின் துணையோடு குற்றங்கள் செய்ய தயங்காமல் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்கிறார்களே போதாதா?).
குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் (பாரபட்சமற்ற புலனாய்வு என்றால் என்னவென்று தனியாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்!). புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. (அதில் எந்த வித குறையுமில்லாமல் "வாங்கிக் கொள்கிறார்களே").காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் (50 சதவீதம் கொடுத்தால் என்ன குறைந்து விடப்போகிறது?).பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.(அப்படிப் பார்த்தால் காவல் நிலையங்களுக்குத்தான் முதலில் அதிக பாதுகாப்பு தரவேண்டும்).
மாணவிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்.பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும்.இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார்.இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
========================
இந்த செய்தியையும் படிச்சுடுங்க. அப்பதான் மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட காமெடியின் கருத்து முழுதாகப் புரியும்.
ஆயுதப்படை பெண் போலீசாருக்கு எஸ். ஐ.,க்கள் பாலியல் தொந்தரவு
செப்டம்பர் 20,2009சேலம்: சேலம் ஆயுதப்படையில் பணி செய்யும் பெண் போலீசாரிடம், இரவு நேரங்களில், தணிக்கை என்ற பெயரில், எஸ்.ஐ.,க்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, உயரதிகாரிகள் விசாரிக்கின்றனர். ஆயுதப்படை போலீசார், முதல்வர், டி.ஜி.பி., மற்றும் கமிஷனருக்கு அனுப்பிய மனு விவரம்: சேலம் மாநகர ஆயுதப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் உள்ளனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர், தெரிந்த ஒருவரை அழைத்து வந்து, "சென்னையில் இருந்து டி.ஜி.பி., அனுப்பி வைத்துள்ளார். அவரிடம், 50 ரூபாய் கொடுத்து அனைவரும் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்து தரும் அடையாள அட்டையை, கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்' என, கூறினார்.
ஆனால், தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வங்கி ஏ.டி.எம்., கார்டு இருந்தும், சம்பளத்தை தவிர இ.டி.ஆர்., - டி.ஏ., நிலுவைத் தொகை பணத்தை, வங்கி கணக்கில் போடுவதில்லை. அந்த பணத்தை பெறுவதென்றால், 100, 200 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வாங்க முடிகிறது. ஜி.பி.எப்., - இ.எல்., சரண்டர் போன்ற பணத்தை பெறும்போது, கருவூல ஏட்டாக பணியாற்றிய கோவிந்தனுக்கு, 300 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. லஞ்சம் வாங்கும் பணத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு பிரித்து கொடுத்து, அவர் அதே பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
இதே போன்று, ஆயுதப்படையில், "எஸ்கார்ட்' பணி இல்லாமல், "கார்டு' பணி செய்ய, 500 ரூபாய் வரை போலீசாரிடம் பெறப்படுகிறது. மூன்று மாதத்துக்கு முன் லஞ்சம் வாங்கிக் கொண்டு டூட்டி போடுவதாக அளித்த புகாரையடுத்து, ரைட்டர்கள் அனைவரும் மாற்றப்பட்டனர். கணேசன் என்ற ரைட்டர் மட்டும் மாற்றப்படவில்லை. அவர் இன்ஸ்பெக்டருக்கு பணம் வசூல் செய்து தருவதால் அவரை கண்டுகொள்ளவில்லை. இரவு நேரங்களில் ஆயுதப்படையில், "கார்டு டூட்டி' செய்யும் பெண் போலீசாரிடம் தணிக்கை என்ற பெயரில், எஸ்.ஐ.,க்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர்.
இது பற்றி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசாரை, கொத்தடிமைகள் போல் நடத்துகின்றனர். இங்கு நடக்கும் ஊழல், முறைகேடுகளை உயரதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பழனிசாமி கூறுகையில், "தேவையில்லாத புகார் கூறுகின்றனர். அடையாள அட்டையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு ஆள் போட்டோ எடுக்க வந்தார். "
நைட் டூட்டியில்' பெண் போலீசார் நியமிப்பதில்லை' என்றார். போலீஸ் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் கூறியதாவது: மாநகர ஆயுதப்படை புகார் குறித்து எனக்கும் மனு வந்தது. டி.ஏ., - இ.எல்., சரண்டர் பணத்தை கையிலே கொடுப்பதில்லை, எஸ்.பி.ஐ., வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தி விடுகிறோம். மாநகர ஆயுதப்படை போலீசாரிடம் தனித்தனியாக விசாரித்தும், ஒருவரும் புகார் குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால், மனுவாக அனுப்புகின்றனர். நாங்கள் எப்படி விசாரணை நடத்துவது? இவ்வாறு ஜான்நிக்கல்சன் கூறினார்.
No comments:
Post a Comment