சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, September 26, 2009

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்....இன்னும் தொடரும்.....

கணவரை கொன்ற மனைவி

அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.

மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.

உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.

கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.

பலருடன் தொடர்பு வைத்த மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மேலும் பல கள்ளக் காதல் வெறி பிடித்த கொலைகளை இங்கே காணலாம்: http://tamil498a.blogspot.com/

=====================

இது போன்ற கொலைகள் மேலும் தொடரும் அபாயம் இருக்கின்றது. அரசாங்கம் செய்யத் தவறியதை அப்பாவிகளின் சாபத்தீ செய்ய ஆரம்பித்திருக்கிறது. அப்பாவிகளின் சாபத்தீ அழிக்கப்படவேண்டிய கயவர்களிடையே காமத்தீயாக பரவி அழித்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற கயவர்களுக்கு இரண்டு வன்முறை ஆயுதங்கள்: ஒன்று- அரசாங்கம் கொடுக்கும் தவறான வரதட்சணை சட்டங்கள், இரண்டாவது கள்ளக் காதல் கொலை. அழிக்கப்படவேண்டிய நச்சுயிரிகள். இயற்கையின் விளையாட்டு தொடரட்டும்.
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.