இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, March 10, 2011

சாராய பாட்டில் + மிக்ஸர் பாக்கெட் =?!@#$%&*

பொதுவாக பொய் வரதட்சணை வழக்குகள் மகளிர் காவல்நிலையங்களில்தான் பதிவுசெய்யப்படும். அங்குதான் கணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் கொல்லாமல் கொல்லப்படுவார்கள்.

இதுபோன்ற பொய் வழக்குகளில் சிக்கும் இளம் அப்பாவிக் கணவன்கள் சிறிது புண்ணியம் செய்திருந்தால் பின்வரும் செய்தியில் இருக்கும் பெண் போலிஸைப்போல இருப்பவரிடம் சிக்கலாம். பொய் கேசில் சிக்குவதற்கும் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

"சரக்கு' போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, "சைடு டிஷ்'க்கு சண்டையிட்டதால், "சஸ்பெண்ட்'
மார்ச் 11,2011 தினமலர்

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, "சைடு டிஷ்'க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், "இலவச சைடு டிஷ்' வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, "சைடு டிஷ்' கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர். போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்," சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====


5 comments:

சக்தி கல்வி மையம் said...

ஆமா..ஆமா.. ஓட்டு போட்டுட்டேன்.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நன்றி கருன். மக்களாட்சிக் கடமையை செய்ததற்கு நன்றி!

Anonymous said...

ஆமாம் ஒரு சந்தேகம், தண்ணி எல்லாம் அடிச்ச பிறகு எதுக்கு சைடிசும் மிக்சரும். அது எல்லாம் அடிக்கும் போதல்லவா தேவைபடும். செய்தி நம்பும் படியாக இல்லை.

பனிமலர்.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

ஆமாம் ஒரு சந்தேகம், தண்ணி எல்லாம் அடிச்ச பிறகு எதுக்கு சைடிசும் மிக்சரும். அது எல்லாம் அடிக்கும் போதல்லவா தேவைபடும். செய்தி நம்பும் படியாக இல்லை.

பனிமலர்.


உங்களது கேள்வி இந்த செய்தியைப் படிப்பவர்களின் சிந்தனையை நன்றாக தட்டி எழுப்பியிருக்கிறது.

பதிவுகளை ஆழ்ந்து படித்தால் உங்களுக்கு மேலும் பல கேள்விகள் எழலாம். அவற்றையும் எழுதுங்கள். மற்றவர்களும் பயனடையட்டும்.

மிக்க நன்றி பனிமலர்.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நிலவு said...

ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 4 க்கு எதிராக‌ ! - http://powrnamy.blogspot.com/2011/03/4.html

நிலவு,
உங்களது பதிவுகளை கட்டணம் செலுத்தாமல் இங்கே இலவச விளம்பரம் செய்துகொண்டீர்கள் போலிருக்கிறதே!
தங்கள் வருகைக்கு நன்றி!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.