இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 19, 2011

மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்

கசப்பான உண்மை! உண்மை சில உள்ளங்களுக்கு எப்போதுமே கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்கள் வாயில் கொஞ்சம் சர்க்கரையைக் கொட்டிக்கொண்டு படிக்கவும்.

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக மற்றொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

இந்தியாவில் இப்போதெல்லாம் பெண்களின் நிலை எவ்வளவோ உயர்ந்துவிட்டது. நல்ல ஏட்டுக் கல்வி, உயர்ந்த பணி, கை நிறைய சம்பளம் இவற்றைக் காணும் சில பெற்றோர்கள் தங்கள் மகளின் வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டலாம் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதன்விளைவாக பெண்ணின் திருமணத்தை எந்தவகையிலாவது தடை செய்து தள்ளிப்போடுகிறார்கள்.

அப்படியே தட்டுத்தடுமாறி திருமணம் நடந்துவிட்டால் மகளின் திருமண வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனையைக்கூட பெரிதாக்கி மகளுக்கும், மருமகனுக்கும் பிளவு ஏற்படுத்தி வரதட்சணைக் கொடுமை என்று வண்ணங்கள் பூசி மகளை நம்பவைத்து தங்கள் மகளை வைத்தே மருமகன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளை வீட்டோடு வைத்துக்கொண்டு அவளின் வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இது போதாதென்று மகளை வைத்து மருமகனை மிரட்டி பொய்வழக்கிலிருந்து விடுபடவேண்டுமென்றால் பெருந்தொகை கொடுக்கவேண்டும் என்று கூட சில பெற்றோர்கள் தங்கள் சொந்த மகளை வைத்தே (Extortion) வியாபாரம் செய்யவும் துணிந்துவிடுகிறார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இதுபோன்ற பல பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை உங்கள் ஊரில் இருக்கும் குடும்பநல நீதிமன்றங்களை சென்று பாருங்கள்.

இந்த பதிவில் இருக்கும் உண்மை சிலருக்கு கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்களுக்காகவே பின்வரும் வீடியோ. மக்கள் அரங்கத்தில் பொதுஜனம் ஒருவர், அதுவும் ஒரு பெண் இந்த உண்மையை சொல்லியிருக்கிறார். பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.



இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியை இதற்குப் பிறகும் உங்களால் நம்பமுடியவில்லையென்றால் ஒரு பெண்ணே தனது பொறுப்பற்ற பெற்றோரைப் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்திருக்கும் அவலத்தையும் பாருங்கள்.

மகள் தக்க திருமண வயது அடைந்தும் அவருக்கு திருமணம் செய்துவைக்காமல் அவரது பணத்தின் மீதே கண்ணாக இருந்த பெற்றோரைக் கண்டு மனம் நொந்த பெண் தானாக திருமணம் செய்துகொண்டார். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சொந்த மகள் மீதே புகார் கொடுத்து அவரின் அரசுப் பணியை பறித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை!

இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் அந்தப் பகுதியைப் பாருங்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)

K.Rajeswari ...Petitioner
Vs
1.The Secretary to Government,
Personnel and Administrative
Reforms Department,
Govt. of Tamilnadu,Secretariat, Chennai -9.
2.Deputy Director of Medical and
Rural Health Services and Family Welfare,
Salem.
3.Medical Officer,
Govt. Primary Health Centre,
Konganapuram, Salem District. ...Respondents

7. The facts leading to the filing of the writ petition were as follows:- The petitioner joined as a Store Keeper in the year 1982 in the Government Health Department in Salem District. Her parents did not take care of her and did not get her married at an appropriate age. She had crossed 32 years but yet her parents were only concerned about her income. At that time, when she was feeling depressed and mentally worried about her future, one Thangavel approached her and asked the petitioner whether she was willing to marry him. He also told her that he has a wife who is ill and unable to take care of herself. But however, he has got two children through her. The said Thangavel was unwilling to divorce his first wife on the ground that she was unwell. Therefore, with the consent of his first wife, the petitioner got married to the said Thangavel. The marriage was solemnized on 08.01.1990 at the Sub-Registrar Office, Edapadi. The petitioner never had intention to disregard the law and she got married only after ascertaining the wishes of the first wife of Thangavel.

8. The said Thangavelu was employed as a Junior Assistant in the Department of Treasuries and Accounts. After their marriage, the parents of the petitioner started giving trouble to the petitioner's husband by sending petitions to his department.

9. The petitioner's parents, however started sending further petitions to the petitioner's department which resulted in the issuance of a charge memo under Rule 17(b) of the TNCS (D & A) Rules to the petitioner on 24.07.1996. The petitioner gave her explanation on 19.08.1996. Subsequently, an enquiry was held against the petitioner and a personal hearing was given to her on 10.06.1997. The Enquiry Officer's report was communicated to the petitioner with a covering letter dated 11.05.1998. The petitioner sent a further representation dated 23.06.1998. Thereafter, the second respondent consulted the Government Pleader, Salem. The Government Pleader by his opinion dated 18.10.000 opined that the action committed by the petitioner will amount to 'Bigamy' and the consent obtained from the first wife will not in any way legalise the action. Further, it was also indicated that even if the second marriage was void, the fact that Government servant living with another married Government servant will also be a misconduct in terms of Rule 19(1) of the Government Servants' Conduct Rules. In view of the marriage, which fact was not disputed, a major penalty was imposed on her. Accordingly, the petitioner, vide an order dated 31.10.2000 was removed from service by the second respondent. Though she was eligible to file a statutory appeal, she did not do so. After getting waiver of the appellate remedy, she filed the Original Application and also obtained an interim stay as noted already.


இந்த நீதிமன்ற வழக்கின் செய்தி...


இரண்டாம் திருமணம் நடந்தாலும் பணி நீக்கம் செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு
மார்ச் 14,2011 தினமலர்

சென்னை: ஏற்கனவே திருமணமான, அரசு ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்ததால், அந்தப் பெண் ஊழியரை பணி நீக்கம் செய்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில், ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றினார். 32 வயதை கடந்தும் திருமணமாகவில்லை. அதைப் பற்றி, அவரது பெற்றோர் அக்கறை கொள்ளவில்லை. கருவூலத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய தங்கவேல் என்பவர் ராஜேஸ்வரியை அணுகி, திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியின் ஒப்புதலுடன், இரண்டாவதாக ராஜேஸ்வரியை தங்கவேல் திருமணம் செய்து கொண்டார். எடப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கவேல் பணியாற்றும் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, தங்கவேல் மீது விசாரணை நடந்தது. ஊக்க ஊதியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தனர். பின், பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், தங்கவேல் மனு தாக்கல் செய்தார். கட்டாய ஓய்வை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மகளுக்கு எதிராகவும் பெற்றோர் புகார் அனுப்பினர். விசாரணை நடந்தது. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியர் ஒருவருடன், அரசு ஊழியர் (பெண்) வாழ்ந்து வந்தால், அது ஒழுங்கீனமாகும் எனக் கூறி, ராஜேஸ்வரியை பணியில் இருந்து நீக்கி, சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டார்.

பணி நீக்கத்தை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், "தீர்ப்பாய உத்தரவுப்படி எனது கணவர் தங்கவேல், மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டார். எனக்கு மட்டும் தண்டனை அளிப்பது என்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.கணேசன், எஸ்.மணி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியரைப் பொறுத்த வரை, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ள தனிப்பட்ட சட்டம் அனுமதித்தாலும், அரசின் முன் அனுமதியின்றி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி செய்து கொண்டால், அந்த திருமணம் செல்லத்தக்கது என்றாலும், நடத்தை விதிகளை அந்த அரசு ஊழியர் மீறியதாக அர்த்தம்.

இருதார திருமணம், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். அரசுப் பணியில் ஒருவர் சேரும் போது, நடத்தை விதிகள் அவருக்கு நன்றாக தெரிய வேண்டும். அந்த விதிகளை மீறினால் என்ன தண்டனை என்பதும் தெரிய வேண்டும். எனவே, அந்த விதி தன்னிச்சையானது என்றோ, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறது என்றோ கூற முடியாது. ஆகையால், தண்டனை விதிக்கும் விதிகள் செல்லும். முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றே இரண்டாவது திருமணம் நடந்தது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றாலும் கூட, இந்திய தண்டனைச் சட்டப்படி, இரண்டாவது திருமணம் கிரிமினல் குற்றம். மேலும் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அது ஒழுங்கீனமாக கருதப்படும்.

தங்கவேல் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவில்லை. அவரை பணியில் நியமித்துள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர், நடத்தை விதிகளின்படி ஒழுங்கீனம் செய்துள்ளார் என்றாலும், அவருக்கு எந்த தண்டனையும் இல்லாமல் விட்டுள்ளனர். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார் என்பதற்காக அந்தப் பெண்ணை கடுமையாக தண்டிக்கக் கூடாது. கணவனுக்கு ஒரு அளவுகோல், மனைவிக்கு ஒரு அளவுகோல் என, இரண்டு விதமான அளவுகோலை அரசு பின் பற்ற முடியாது.

சரி சமமாக குற்றம் புரிந்த கணவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு, மனைவிக்கு மட்டும் பணி நீக்கம் என்கிற தண்டனையை அரசு ஏன் விதிக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, தண்டனை விதிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதில் கோர்ட் தலையிட வேண்டியதுள்ளது. மனுதாரரை வேறு விதமாக கருதுவதற்கு எந்த சிறப்பான காரணங்களையும் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. கணவன், மனைவி வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர் என்பதை மட்டுமே அரசு கூறியுள்ளது. இந்த பணி நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

====

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி இப்படி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க உடன் பிறந்தவர்கள் தன் சகோதரிக்கு சட்டப்படி சேரவேண்டிய சொத்தை அவளது திருமணத்திற்குப் பிறகு எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் கண்டு மகிழுங்கள். இந்த சொத்து தொடர்பான விஷயத்தை இங்கே சென்று படியுங்கள்: இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி



இந்தியாவில் உருவாகும் பல பொய் வரதட்சணை வழக்குகளின் பின்னணி இதுதான். 1. பெண்ணை பெற்றவர்களின் பணப் பேராசை, 2. உடன் பிறந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிக்கு சொத்தை கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று போடும் திட்டங்கள். இந்த இரண்டின் வெளிப்பாடுதான் சொந்த மகளின் அல்லது உடன்பிறந்த சகோதரியின் வாழ்வையே நாசமாக்கும் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருப்பதற்குக் காரணம்.

பெற்றோர் மற்றும் உடன் பிறந்த ஆண்களின் தவறான வழிகாட்டுதலால் பொய் வரதட்சணை வழக்கு மூலம் கட்டிய கணவனையும் விட்டு விட்டு, உடன் பிறந்த ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு சட்டப்படியாக தனக்கு சேரவேண்டிய குடும்ப சொத்தையும் இழந்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கடைசியில் நீதிமன்றங்களில் “வழக்கறிஞரின் உதவியோடு” பெண்கள்பாதுகாப்பு சட்டங்கள் மூலம் வாழ்வு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள் பல அப்பாவிப் பெண்கள்! இந்தக் கொடிய காட்சியைக் காண ஒரு முறை சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்குச் சென்று வாருங்கள்.
====



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.