எஸ்.பி.,யின் மனைவி என பொய் சொல்லி நகை, மொபைல் போன் "லபக்'கிய பெண் கைது
மார்ச் 11,2011 தினமலர்
மார்ச் 11,2011 தினமலர்
தென்மலா : சென்னையைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி.,யின் மனைவி என நாடகமாடி, நகை, மொபைல்போனை களவாடிச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கு உட்பட, பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர் இவர் என்பது, விசாரணையில் தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (47). இவர், ஆறு பேரை திருமணம் செய்து, அவர்களை விட்டு விலகி தனியே வசித்து வந்தார். ஒரே வீட்டில் வசிக்காமல், பல்வேறு இடங்களில் வாடகை வீடு, லாட்ஜ், தெரிந்தவர்கள் வீடு என, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். தென்மலா பகுதியைச் சேர்ந்த பாபு, சில ஆண்டுகளுக்கு முன், திருவனந்தபுரம் நேமம் பகுதியில் அப்பெண்ணின் வீட்டுக்கு அருகே வசித்தபோது பழக்கமானவர். அவரிடம், தன் கணவர் சென்னையில் போலீஸ் எஸ்.பி.,யாக பணியாற்றி வருவதாக பொய் சொன்னார். தற்போது பாபு, தென்மலா பகுதியில் வசித்து வருகிறார். முன்பு ஏற்பட்ட பழக்கத்தை வைத்துக் கொண்டு, சீதாலட்சுமி, 4ம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது சகோதரி தேநீர் போடுவதற்காக சமையலறைக்குச் சென்றார். அத்தருணத்தை பயன்படுத்திக் கொண்ட சீதாலட்சுமி, அவரது மொபைல்போன், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார். தேநீர் போட்டுக் கொண்டு வந்த பாபுவின் சகோதரி, அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு தான் மொபைல்போனும், பீரோவில் இருந்த நகைகளும் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். பாபு, தென்மலா போலீசில் புகார் செய்தார். களவாடிய மொபைல்போன் மூலம் சீதாலட்சுமி பலரை தொடர்பு கொண்டார். அதை, தொடர்ந்து ஆய்வு செய்த போலீசார், அவர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு சென்று, சீதாலட்சுமியை கைது செய்தனர். பலருடன் வாழ்ந்து வந்த அப்பெண், தன் வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது சீருடையை பயன்படுத்தி, தன்னை எஸ்.ஐ., என கூறிக் கொண்டு நகை கடையில் கொள்ளை அடித்துள்ளார்.
தன்னுடன் வாழ்ந்து வந்த கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கிலும் சம்பந்தப்பட்டவர். இவருக்கு இரு குழந்தைகள் உண்டு. ஆடம்பர வாழ்க்கை வாழ, எவ்வித குற்றத்தையும் செய்ய தயாராக இருந்துள்ளார். கைதான சீதாலட்சுமியிடம், மாநிலத்தில் தற்போது பதவியில் உள்ள பெரும்பாலான போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும், தொலைபேசி, மொபைல்போன் எண்கள் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.
====
பல மருமகள்களும் இதுபோலத்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தான் நினைத்ததை அடையவேண்டுமென்றால் எந்தவித பொய்யையும் கூசாமல் புகாரில் எழுதித் தருகிறார்கள். இதுபோன்ற மருமகள்களுக்கும் போலிஸ்காரர்களும், வழக்கறிஞர்களும்தான் நண்பர்கள் ;)
=====
பல மருமகள்களும் இதுபோலத்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தான் நினைத்ததை அடையவேண்டுமென்றால் எந்தவித பொய்யையும் கூசாமல் புகாரில் எழுதித் தருகிறார்கள். இதுபோன்ற மருமகள்களுக்கும் போலிஸ்காரர்களும், வழக்கறிஞர்களும்தான் நண்பர்கள் ;)
=====
2 comments:
இது ஒரு புதிய தகவல்...!
மிக்க நன்றி திரு. பிரணவம் ரவிக்குமார்.
Post a Comment