சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, March 20, 2011

சட்டபூர்வமான இந்திய கள்ளக்காதல்!

இந்திய சட்டங்கள் “பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களை எப்படி கள்ளக்காமக் குற்றங்களை செய்யத் தூண்டுகின்றன என்பதை பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

அதற்கு முன்பாக IPC497 என்ற இந்திய பெண்கள் கள்ளக்காம ஆதரவு சட்டத்தை பாருங்கள்.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


இந்த சட்டத்தின்படி கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண்ணிற்கு எந்தவித தண்டனையும் கிடையாது. ஆனால் 1971ல் இந்திய சட்டக்குழு இந்த சட்டத்தில் திருத்தம் செய்து குற்றம் செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாக தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று அரசிற்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போல இந்த நல்ல திருத்தங்களை “பெண்” என்ற காரணம் காட்டி இந்தியத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU


23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. The said provision of Section 497 came to be challenged as being discriminatory because the consenting woman is not punished and hence the provision was violative of Article 14 of the Constitution.

24. The Supreme Court in the case relating to Yusuf Abdul Aziz v. State of Bombay reported in AIR 1954 SC 321 held that the Section do not offend Articles 14 and 15 of the Constitution. In that case, it was also held that very often because of her position in the society is weak and unable to defend, the law can make a distinction in the matter of defining an offence between a man and a woman. Subsequently, the Law Commission in its 42nd Report in 1971 recommended the retention of Section 497 with a modification that even a married woman who has sexual relationship with a person other than her husband should be made punishable for 'adultery', but the said recommendation was not accepted by the law makers .

அதனால் இந்த கள்ளக்காம சட்டம் மேலும் பல பெண்களுக்கு கள்ளக்காமத்தில் ஈடுபட உரிமம் வழங்கியது போலாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து 1985ல் இந்த முறையற்ற சட்டப் பிரிவு இந்திய உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக்காலத்தில் ஆண், பெண் என அனைவரும் அனைத்துத் துறையிலும் நன்றாகவே முன்னேறி இருக்கிறார்கள். இந்திய சமூகம் மாறிவிட்டது. இனியும் பெண் செய்யும் தவறுகளை “பெண்” என்ற போர்வையில் ஆதரிப்பது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போல இந்திய உச்ச நீதிமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

25. The discrimination made by Section 497 between man and woman once again came to be considered by the Supreme Court in Smt.Sowmithri Vishnu v. Union of India and another reported in AIR 1985 SC 1618. At that time, it was argued that the society had advanced and women also are having high position in society and hence, the Court must take fresh look on the said section. But however the Supreme Court did not consider that there was any case for reviewing the Yusuf Abdul Aziz's case (cited supra).

மொத்தத்தில் இந்தியாவில் பெண்களுக்கு கள்ளக்காமத்தில் ஈடுபட முழுச்சுதந்திரம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் அது அவர்களது பிறப்புரிமை என்றுகூட சட்டத்தை இயற்றும் தலைவர்கள் சொல்வார்கள்! இதுபோன்ற சட்டங்கள் இந்தியப் பெண்களை தவறு செய்யத் தூண்டும் விதமாகத்தான் இருக்கின்றன. அது ஏன் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பெயர்தான் “புதிய பெண்ணுரிமை”.

பெண்களைப் போற்றுகிறோம் என்ற பெயரில் பெண்கள் செய்யும் அனைத்துத் தவறுகளையும் தட்டிக்கொடுத்து ஆதரிப்பது எந்த வகையில் பெண்ணுக்கு பெருமை சேர்க்கும்?

இதுபோதாது என்று “பெண்ணுரிமை” என்ற பெயரில் அப்பாவி ஆண்களை முறையற்ற சட்டங்கள் மூலம் அழிப்பது என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்தவேண்டிய ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய செயலா?

இந்த பொறுப்பற்ற சட்டங்களின் மூலம் நடக்கும் அட்டூழியங்களால் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலங்கள் இப்படித்தான் செய்தித்தாளில் தினமும் வந்துகொண்டிருக்கும்.

கள்ளத்தொடர்பால் வந்த வினை:கணவன் கொலை; மனைவி கைது
மார்ச் 20,2011தினமலர்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கணவனை கொலை செய்த "பாசக்கார மனைவி''யை பாடாலூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் அருகே தேனூர் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கமரன் மகன் சுப்ரமணியன் (39). இவரது மனைவி சுசிலா (35). இருவருக்கும் கடந்த 18 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சங்கீதா (14), சக்திவேல் (12), சுந்தரி (11) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சுசிலாவுக்கு இதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த சுப்ரமணியன் சுசிலாவை கண்டித்துள்ளார். இதன் பின்னரும் சுசிலா கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதனால் சுப்ரமணியனுக்கும், சுசிலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சுப்ரமணியனுக்கும், சுசிலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்ரமணியனை கொலை செய்ய சுசிலா திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து இரவு 12 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சுப்ரமணியனை வீட்டிலிருந்த கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மாரடைப்பால் சுப்ரமணியன் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதை நம்பிய உறவினர்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து நேற்று காலை 10 மணியளவில் இதே கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக சுப்ரமணியனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.சுடுகாட்டில் புதைப்பதற்காக சுப்ரமணியன் உடலில் உள்ள நகைகளை கழட்டுவற்காக உடலில் தேடியபோது கழுத்து நெரிக்கப்பட்ட காயம் இருந்தது கண்டு சுப்ரமணியன் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுப்ரமணியனின் உறவினர்கள் பாடாலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து, சுப்ரமணியன் பிணத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.பாடாலூர் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து வழக்கு பதிந்து, சுப்ரமணியனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சுசிலாவை கைது செய்து வேறு யாரும் இக்கொலையில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரிக்கிறார்.கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தை சேர்ந்தவர். சுரேஷ் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 24). இவருக்கும், வடபழனி ஒட்டகப் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (37) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.இது சுரேஷ் கண்ணனுக்கு தெரிய வந்ததால் அவர் ஜெயலட்சுமியை கண்டித்தார்.

இதனால் கோபித்துக் கொண்ட ஜெயலட்சுமி, காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பிறகும் ரமேஷ்-ஜெயலட்சுமி இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வந்த ஜெயலட்சுமி, ரமேசை சந்தித்து பேசியுள்ளார். நேற்று இரவும், ஜெயலட்சுமி, காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.

இன்று காலையில் ரமேசின் வீட்டுக்கு சென்றார்.அங்கு வைத்து இருவருக்கு மிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி ரமேஷ் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய லட்சுமியும், ரமேசை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, ஜெயலட்சுமியின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஜெயலட்சுமி பலியானார். பின்னர் ரமேஷ், ரத்தம் சொட்ட... சொட்ட... இரும்பு கம்பியுடன் நேராக வடபழனி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

====

கள்ளக்காமத்தில் ஈடுபட நினைக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக IPC497 என்ற கள்ளக்காம ஆதரவு சட்டத்தை கொடுத்திருக்கும் அரசாங்கம் இதுபோன்ற கள்ளக்காமப் பெண்கள் தங்களுக்குத் தடையாக இருக்கும் கணவனை தண்டிப்பதற்காகவே கொடுத்திருப்பதுதான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எனப்படும் IPc498A.

இந்த சட்டத்திலும் மனைவி கணவனுக்கெதிராக சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் எந்தவித ஆதராமும் இல்லாமலேயே உண்மை என்று கருதப்படும். உடனடியாக கணவன் கைது செய்யப்பட்டுவிடுவான்.

பெண்ணுக்கு பாதுகாப்பு தருவதாக நினைத்து தவறாக இயற்றப்பட்டுள்ள இதுபோன்ற சட்டங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்ததை விட பல பெண்கள் இந்த சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பெண்மைக்கே அவமானத்தையும், கலங்கத்தையும் ஏற்படுத்தியதுதான் அதிகம்.

நடுநிலையற்ற இந்திய சட்டங்கள் “பெண்ணுரிமை” என்ற பெயரில் தவறு செய்யும் பெண்களை பாதுகாப்பதற்காக ஒருதலைபட்சமான புதுப்புது சட்டங்களை இயற்றி அப்பாவி ஆண்களை தண்டிப்பதால் வேறுவழியில்லாமல் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியாவில் ஆண்கள் தங்களை எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டுவிட்டார்கள் என்பதை திரைப்படத்தில் காட்டிவிட்டார்கள். இதை பின்வரும் வீடியோவில் பார்க்கலாம்.

1 comment:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.